Load Image
dinamalar telegram
Advertisement

மிதுனம்: விவேகத்தால் வெற்றி

செப்.1 முதல் ராகு 12ம் இடத்தில் சஞ்சரிக்க உள்ளார். ராசியில் இருந்து ராகு விலகுவது நிம்மதி தரும். இதுவரை பரபரப்புடன் செயல்பட்ட நீங்கள் இனி நிதானமுடன் செயல்படுவீர்கள். புதனை ராசிநாதனாகக் கொண்ட உங்களுக்கு ராகுவின் இடமாற்றம் புத்தி தெளிவைத் தரும். எதிலும் தெளிவாக முடிவெடுப்பீர்கள். ஆனால் அதிகப்படியான அலைச்சல் ஏற்படும். சிலர் இடம் மாறுதலை எதிர்பார்க்கலாம். பிரயாணத்தின் போது மனதிற்குப் பிடிக்காத சம்பவம் ஏற்படலாம். பணிச்சுமை கூடுவதால் துாக்கத்தை இழக்கலாம். கடும்உழைப்பால் நிதி நெருக்கடியை சமாளிப்பீ்ரகள். வீடு, வாகனம் சொந்தமாக இருந்தாலும் அதை அனுபவிக்க இயலாத சூழல் உண்டாகும். அவசரத்தேவைக்கு அடுத்தவர் உதவி கிடைக்காது. தன் கையே தனக்குதவி என்பதை உணர்வீர்கள். 6ம் இட கேது எதிரிகளை நாசம் செய்வார். கடன் பிரச்னை குறையும். பலன் எதிர்பாராமல் நண்பருக்கு உதவுவீர்கள். கனவுத் தொல்லையால் துாக்கம் கெடும்.

குடும்பம்: குடும்ப சுபநிகழ்ச்சிகளுக்கு மூலகாரணமாக திகழ்வீர்கள். பூர்வீக சொத்து விஷயத்தில் உறவினர்களால் ஏமாற்றப்படும் வாய்ப்பு உள்ளதால் நிதானமாக செயல்படுவது நல்லது. நீதிமன்றம் செல்லாமல் சமரச பேச்சு மூலம் தீர்வு காணும் வாய்ப்புண்டு. பிள்ளைகளின் மந்தநிலை போக்க முயற்சி எடுப்பீர்கள். அவர்களின் எதிர்கால கருதி அதிகம் செலவழிப்பீர்கள். தம்பதியராக இணைந்து செய்யும் பணிகள் சிறக்கும்.

தொழில்: தொழில் ரீதியான தடைகள் குறுக்கிடும். அடிக்கடி பயணம் மேற்கொள்வீர்கள். சிலர் வெளிநாட்டுப் பயணம் செல்வர். புதிய முயற்சியில் ஈடுபடும்போது மிகுந்த கவனம் தேவை. ஷேர், புரோக்கர், கமிஷன் ஏஜன்சீஸ் தொழில் நடத்துவோர் நிதானமுடன் செயல்பட வேண்டிய நேரம் இது. பணியாளர்கள் அதிகாரிகளிடம் கருத்து வேறுபாடு கொள்வர். அடிமைத் தொழில் செய்வோருக்கு சுயமாகத் தொழில் செய்யும் நிலை உருவாகும். தகவல் தொடர்பு சாதனங்களால் சுயதொழில் செய்வோர் முன்னேற்றம் காண்பர்.

நிதிநிலை: 12ல் ராகு, 8 ல்குரு, சனி அமரஉள்ளதால் வீண் செலவு அதிகரிக்கும். வருமானத்தை உடனுக்குடன் சேமிப்பது அவசியம். பேராசைப்படாமல் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் சேமிப்பது நல்லது. ஏமாற்றப்படும் வாய்ப்பு உள்ளதால் பணவிஷயத்தில் கூடுதல் எச்சரிக்கை தேவை. புதிய சொத்து வாங்கும் முயற்சியை தவிர்க்கவும். கொடுக்கல் வாங்கலில் பிரச்னை வரலாம்.

பெண்கள்: குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். பொறுமை காப்பது நன்மை தரும். பெற்றோர், உடன்பிறந்தோரின் உதவி கிடைக்கும். பொறுப்புகள் என வந்துவிட்டால் கணவருக்கு நிகராக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.

மாணவர்கள்: கல்வியில் முன்னேற்றம் பெற கடும் உழைப்பு தேவை. தேர்வு நேரத்தில் கூடுதல் முயற்சி அவசியம். நண்பர்களோடு கூட்டு முயற்சியில் ஈடுபடுவது நல்லது. அறிவியல் துறை ஆய்வாளர்கள் ஓய்வின்றி உழைக்க வேண்டியிருக்கும். கம்ப்யூட்டர் துறை மாணவர்கள் முன்னேற்றம் காண்பர்.

உடல்நிலை: உணவில் கட்டுப்பாடு அவசியம். கண் பரிசோதனை அவ்வப்போது செய்வது நல்லது. வயிற்றுவலி, வாய்ப்புண், தோல் நோய், அஜீரணத்தால் அவதிப்பட நேரிடும். பெற்றோரின் உடல்நலனிலும் அக்கறை தேவை.

பரிகாரம்:
* புதனன்று விஷ்ணு சகஸ்ர நாமம் படித்தல்
* திருவோணத்தன்று பெருமாளுக்கு நெய்தீபம்
* ராகு கேது பெயர்ச்சியன்று உளுந்து தானம்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement