Advertisement

ஆண்டாள் நாச்சியார் கோவிலில் அபிஷேக அலங்கார பூஜை

Share

உடுமலை: உடுமலை குறிஞ்சேரியில் ஆண்டாள் நாச்சியார் கோவில் உள்ளது. பூரம் நட்சத்திரம் ஆண்டாள் நாச்சியார் அம்மனின் நட்சத்திரமாக சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.ஆனி மாதம் பூரம் நட்சத்திர நாளையொட்டி, சுவாமிகளுக்கு நேற்றுமுன்தினம், பால், பன்னீர், மஞ்சள் உட்பட பல்வேறு வகையான திரவியங்களில் அபிஷேகம் நடந்தது.பச்சை நிறபட்டுடுத்தி, எலுமிச்சை மாலை அணிவித்து, சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. கொரோனா பாதிப்புகள் குறைவதற்கும், சிறப்பு வழிபாடு நடந்தது.

Share
Advertisement
 
Advertisement