பல்லடம்: பல்லடத்தை அடுத்த அல்லாளபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவ விழாவை கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர்.
மார்கழி மாதத்தை முன்னிட்டு, பெருமாள் கோவில்களில், மார்கழி மாத பூஜைகள் தினசரி நடந்து வந்தன. வைகுண்ட ஏகாதசியை தொடர்ந்து, மார்கழி மாத விழா நிறைவுக்கு வந்துள்ளது. ஆண்டாள் விரதம் இருந்து, திருமாலை அடைந்த, கூடாரை வெல்லும் சீர் உற்சவம், நேற்று முன்தினம் நடந்தது. ஆண்டாள் தவமிருந்து, பெருமாளை அடைந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில், திருப்பாவை பாசுரங்கள் பாடி, சிறப்பு பூஜைகள் நடந்தன. ஆண்டாள், பெருமானை அடைந்த புராணம் குறித்து, பாடல்கள் மூலம் பக்தர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. வஷே்டி, புடவை, பூ, பழங்கள், வளையல், மஞ்சள், குங்குமம், இனிப்புகள் உள்ளிட்ட சீர் வரிசைகளுடன், மாலை மாற்றுதல், மாங்கல்ய சரடு அணிவித்தல் உள்ளிட்ட சடங்குகளுடன், திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடந்தது. ஸ்ரீதேவி பூதேவி சமேதராக, வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பங்கேற்ற அனைவருக்கும் கல்யாண விருந்து அளிக்கப்பட்டது.
ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம்: பக்தர்கள் பரவசம்
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.