சங்காபிஷேக விழா நாளை துவக்கம்
உடுமலை:உடுமலை, பிரசன்ன விநாயகர் கோவிலில், 108 வலம்புரி சங்காபிஷேக விழா, நாளை துவங்குகிறது.கார்த்திகை மாதம் முழுவதும் வரும் திங்கட்கிழமைகளில், சிவபெருமானுக்கு சங்காபிஷேக பூஜை சிறப்பாக நடக்கிறது. உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், காசி விஸ்வநாத சுவாமிகளுக்கு, நாளை (18ம் தேதி), கார்த்திகை இரண்டாம் நாளில், சங்காபிஷேக சிறப்பு பூஜை துவங்குகிறது.மாதம் முழுவதும் வரும் ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும்( நவ., 25, டிச.,2, டிச.,9 மற்றும் டிச.,16) காலை, 9:30 மணிக்கு விநாயகர் பூஜை, கலச பூஜை, சங்கு பூஜை மற்றும் ேஹாமம் நடக்கிறது. தொடர்ந்து, அபிஷேக பூஜைகள், மற்றும் 108 வலம்புரி சங்காபிஷேக பூஜை நடக்கிறது. மதியம், 12:00 மணிக்கு சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடக்கிறது.இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் சீனிவாச சம்பத், தக்கார் சந்திரமதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.