Load Image
Advertisement

'டவுட்' தனபாலு

தி.மு.க., துணை பொதுச் செயலர் கனிமொழி: முந்தைய லோக்சபா தேர்தலின்போது, தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட சில விஷயங்களை செய்ய முடியாமல் போனதற்கு, மத்திய அரசு பாரபட்சமாக நடந்து கொண்டது தான் காரணம். ரயில்வே திட்டங்களுக்கு கூட, பா.ஜ., ஆட்சி செய்யாத மாநிலங் களுக்கு, குறிப்பாக, தமிழகத்துக்கு நிதி குறைவாக ஒதுக்கப்படுகிறது. இதனால், சில திட்டங்களை செயல்படுத்த முடியாமல் உள்ளது.

டவுட் தனபாலு: மத்திய அரசு நிதி ஒதுக்காம, சில வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியலை என்பதை ஏத்துக்கலாம்... ஆனா, சட்டசபை தேர்தலப்ப உங்க கட்சி கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றாம இருப்பதற்கு, யார் மீது பழி போடுவீங்க என்ற, 'டவுட்' வருதே!

பத்திரிகை செய்தி: கரூர் லோக்சபா தொகுதிக்கு வேட்பாளர் கிடைக்காமல், அ.தி.மு.க., திணறி வரும் நிலையில், முன்னாள் அமைச்சர், எம்.ஆர்.விஜய பாஸ்கரை போட்டியிடச் சொல்லி, அக்கட்சி தலைமை நெருக்கடி கொடுத்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.

டவுட் தனபாலு: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தப்ப, 39 தொகுதிக்கும் பல ஆயிரம் பேர் விருப்ப மனு கொடுத்துட்டு, 'சீட்' கிடைக்காதான்னு ஏக்கத்தோட காத்துட்டு இருப்பாங்க... இப்ப, உதிரி கட்சிகள் மாதிரி வேட்பாளரை தேட வேண்டிய அளவுக்கு கட்சி தேய்ஞ்சு போயிடுச்சா அல்லது வெற்றி பெறுவோம் என, அந்த கட்சியினருக்கே நம்பிக்கை இல்லையா என்ற, 'டவுட்'தான் வருது!

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்: பா.ஜ., வுக்கு ஆதரவாக கூலிக்கு மாரடிக்கும் பணியை பன்னீர்செல்வம் செய்து வருகிறார். தேர்தலுக்கு பின், அவர், பா.ஜ.,வில் இணைந்து விடுவார். பா.ஜ., தவிர்த்து, யார் வேண்டுமானாலும் எங்கள் கூட்டணியில் இணையலாம்.

-டவுட் தனபாலு: பழனிசாமி தலைமையிலான, அ.தி.மு.க., நாலு வருஷமா ஆட்சியில இருந்தப்ப, பா.ஜ.,வுக்கு விழுந்தடிச்சுட்டு ஆதரவு தந்தீங்களே... அதுக்கு, அவங்க தரப்புல உங்களுக்கு ஏதும் கூலி தந்தாங்களா என்ற, 'டவுட்' வருதே!வாசகர் கருத்து (6)

 • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

  ஜெயலலிதா இருந்தப்ப, துடைப்பத்தை நிறுத்தினால் கூட ஜெயிக்கும். ஜெவும் இன்றய தலமையும் ஒன்றா..?

 • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

  அதிமுக க்கு இன்னும் புலினு நினைப்பு. புலி பசித்தாலும் புல்லை தின்னாது என்ற தோரணையில் பேசி வருகின்றனர். தேர்தலுக்கு பின் சிறையில் களி தின்னும் நிலை வரும்.

 • vbs manian - hyderabad,இந்தியா

  இயலாமையை மத்திய அரசு மீது போட்டு காலம் கழிகிறது.

 • P.Sekaran - விருத்தாசலம்,இந்தியா

  வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஜெயித்துதான் மோடி பிரதமராக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை ஆனால் பிஜேபி அடுத்த சட்டமன்ற தேர்தலில் தனித்து நின்று இரு திராவிட திருட்டு கும்பலிடமிருந்து தமிழகத்தை காப்பாற்றும் பொறுப்பு அண்ணாமலையிடம் தான் உள்ளது. பல பேர் எண்ணம் இதுவாகதான் இருக்கிறது இது நாள் வரை இரண்டு கட்சிகளுக்கு ஓட்டு போட்டு அவர்கள் கொள்ளையடித்தார்களே ஏழை மக்களுக்கு இலவசத்தை தவிற முன்னேற்றத்திற்கு எதுவும் செய்யவில்லை மோடிதான் ஏழை மக்களை முன்னேற்ற பாதையிலும் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாகவும் கொண்டுசெலவார் என்பதில் எந்த ஐய்யமும் இல்லை

 • பேசும் தமிழன் -

  பிஜெபி கட்சி தவிர்த்து வேறு யார் வந்தாலும் ஏற்று கொள்ள சம்மதம் என்று கூறும் ஜெயக்குமார். வேறு பெரிய கட்சி கூட்டணி குறித்து பேசி வருகிறது என்றால்..... யார் திமுக உங்கள் கூட்டணிக்கு வர போகிறார்களா ???

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement