Load Image
Advertisement

'டவுட்' தனபாலு

உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி: 47 ஆண்டுகளாக இல்லாத மிகப்பெரிய வெள்ளம் வந்தும், அதன் பாதிப்பு அதிகளவு இல்லாமல்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2015 மழை வெள்ளத்தில் எத்தனை பேர் இறந்தனர் என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு தெரியும். அதில், 10 சதவீதம் கூட தற்போதைய மழை வெள்ளத்தில் பாதிப்பில்லை. ஆனால், அரசியலுக்காக மட்டுமே குற்றம் சாட்டி வருகிறார் பழனிசாமி. மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணமில்லை.

டவுட் தனபாலு: 2015ல் பெருமழை பெய்தப்பவும், '50 - 60 வருஷமா பெய்யாத கடுமையான மழை'ன்னு தானே, அ.தி.மு.க., ஆட்சியாளர்கள் அப்ப விளக்கம் தந்தாங்க... அப்ப மட்டும், அதை நீங்க ஏத்துக்கிட்டு அமைதியாகவா இருந்தீங்க என்ற, 'டவுட்' வருதே!



பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: 'தமிழகத்தில், ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட்டது செல்லாது' என்று, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி, ஒரு மாதம் முடியும் நிலையில், அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளதா, இல்லையா என்பது தெரியவில்லை. தமிழகத்தில் அப்பாவி இளைஞர்களின் உயிர்களை பறிக்கும் ஆன்லைன் ரம்மி விவகாரத்தில், தமிழக அரசு இந்த அளவுக்கு அலட்சியம் காட்டுவது கண்டிக்கத்தக்கது.

டவுட் தனபாலு: என்னதான் சட்ட போராட்டம் நடத்தினாலும், ஆன்லைன் ரம்மியை தடை செய்ய முடியாது என்பதை தமிழக அரசு உணர்ந்து விட்டதோ... அதனால, எதுக்காக வக்கீல்களுக்கு வெட்டியா பீஸ் தரணும்னு நினைச்சு, கமுக்கமா இருந்துட்டாங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!



பத்திரிகை செய்தி: கடந்த 2017ம் ஆண்டு நடந்த அ.தி.மு.க., ஆட்சியில், அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு கோரி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

டவுட் தனபாலு: இதை எதிர்த்து, திருமாவளவன் மேல்முறையீடு செய்தால், இப்ப இருக்கிற தி.மு.க., அரசு மீதும் குற்றம்சாட்டுற மாதிரி ஆகிடுமே... அதனால, திருமாவளவனும் கமுக்கமா இருந்துடுவார் என்பதில், 'டவுட்'டே இல்லை!





வாசகர் கருத்து (3)

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    என்னதான் கையெழுத்து போராட்டம், சட்ட போராட்டம் நடத்தினாலும், நீட் தேர்வை நிறுத்தமுடியாது என்று தெரிந்தும் எதற்காக மெனக்கெட்டு போராடுகிறார்கள்.

  • Siva Subramaniam - Coimbatore,இந்தியா

    இனியும் பெரு மழை வரும், என்ன செய்யப்போகிறார்கள்?

    • SRINIVASAN V - MANDALAMANICKAM,இந்தியா

      30 மாதம் ஆட்சி இருக்கு . அதற்குள் முடித்து விடுவார்கள் நண்பரே .

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement