Load Image
Advertisement

'அரசியலமைப்பின் சேவகன் நான்':தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்

புதுடில்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில், அலுவல்கள் துவங்கிய உடன், வழக்கறிஞர் மேத்யூஸ் ஜே.நெடும்பாறை கூறுகையில், ''கொலீஜியம் அமைப்பில் சீர்திருத்தம் செய்ய வேண்டும். மூத்த வழக்கறிஞர் என்ற பதவியை ரத்து செய்ய வேண்டும்,'' என்றார்.

அப்போது, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியதாவது: உங்கள் மனதில் எழும் விருப்பத்தை சொல்ல, உங்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது. ஆனால், இந்தியாவின் தலைமை நீதிபதியாக, அதை விட முக்கியமாக, முதலில் ஒரு நீதிபதியாக, நான், சட்டம் மற்றும் அரசியலமைப்பின் சேவகன்.

எனக்கு வகுக்கப்பட்ட நிலைப்பாட்டை தான், நான் பின்பற்ற வேண்டும். இது தான் பிடிக்கும். இதைத் தான் செய்வேன் என, என்னால் கூற முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த அக்டோபரில், வழக்கறிஞர்களை மூத்த வழக்கறிஞர்களாக நியமனம் செய்வதை எதிர்த்து, வழக்கறிஞர் மேத்யூஸ் ஜே.நெடும்பாறை உள்ளிட்ட ஏழு பேர் தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.



வாசகர் கருத்து (6)

  • Sagayam - Chennai ,இந்தியா

    உண்மையில் நீதி இன்னும் சாகவில்லை.

  • SIVAPRAKASAM - Chennai,இந்தியா

    கவர்னர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வர்கள் அல்ல.

  • அப்புசாமி -

    அங்கே ஒருத்தர் மக்களுக்கு சேவை செய்யவே பிறந்தேன்னு உருட்டு ட்டிருக்காரு. இங்கே இவுரு.

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    இவர் சொல்வது உண்மையாக இருந்தால் இதற்குள் இந்திராகாந்தி அறிவித்த அவசரகாலத்தில் சட்டத்துக்குப்புறம்பாக செய்யப்பட்ட மாற்றங்களை நீக்கியிருக்க வேண்டும்.

  • ஆரூர் ரங் -

    பல நீதிபதிகளுக்கும் நாட்டின் தலைவர்களுக்கு மேல் என்ற மனநிலை உருவாகி விட்டது போல இருக்கிறது..சட்டசபைகள் மட்டுமல்ல பாராளுமன்றமும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றுதானே என்பதை மறந்து விடுகிறார்கள்.😒 மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசின் பிரதிநிதிகளாகிய கவர்னர்களையும் உயர்வாக மதிக்கலாமே.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement