Load Image
Advertisement

'ரெசிப்பி'யின் சுவை நேர்மாறாக வந்தால் பதிவு செய்ய மாட்டோம்!

'புட் மணி புட்' என்ற, 'யு டியூப் சேனல்' வாயிலாக, விதவிதமான சமையல்களை செய்து அசத்தும், பொள்ளாச்சி யைச் சேர்ந்த கவிதா:

பொள்ளாச்சிக்கு பக்கத்தில், தேவனாம்பாளையம் கிராமம் தான் எங்க ஊர். என் சமையல், என் வீட்டுக்காரருக்கு ரொம்ப பிடிக்கும். 2016ல், என் வீட்டுக்காரர் தான், சேனல் ஆரம்பிக்கலாம்னு யோசனை கொடுத்தாரு.

என் சமையல் வீடியோக்கள், பெரும்பாலும் தென்னை மரங்கள் சூழந்திருக்கும் ரம்மியமான தோட்டத்தின் மத்தியில் தான் எடுக்கப்படும்.

ஆட்டுக்கல்லில் மசாலா அரைப்பது, விறகு அடுப்பில் சமையல் என, பார்ப்பவரின் நாவில் எச்சில் ஊற வைத்துவிடும்.

தோட்டத்திற்கு சென்று, காய்கறிகளை நேரடியாக செடியிலிருந்து பறித்து சமைப்போம். துவக்கத்தில் வீடியோவில் முகம் காட்டுவதற்கு தயக்கம் இருந்தது.

அதனால், முகம் காட்டி சமைப்பதாக இருந்தால், அம்மா, சித்தி இரண்டு பேரும் தான் சமைப்பாங்க. ஒரு கட்டத்துல, 'நாம எந்தத் தப்பும் பண்ணலையே... ஏன் பயப்படணும்' என்று, முகம் காட்டி சமைக்க துவங்கினேன்.

வீடியோ எடுப்பது, எடிட் செய்வது, வீடியோவுக்கு தேவையான விஷயங்களை ஒருங்கிணைப்பது என, அனைத்துப் பணிகளையும் கணவர் தான் பார்த்துக் கொள்கிறார். இதற்காகவே, தான் பார்த்த வேலையை விட்டு விட்டார்.

கடந்த ஏழு ஆண்டு தொடர் முயற்சியின் பலனாக, 1,000 வீடியோக்களும், யு டியூப்பில் 10 லட்சம், பேஸ்புக்கில், 6.6 லட்சம் சந்தாதாரர்களும் உள்ளனர். என் கொங்கு தமிழ் தான் சேனலின் பெரிய பலம். வீடியோவுக்கு 1,000 கமென்ட்ஸ் வந்தால், அதில் ஒன்று, இரண்டு நெகட்டிவ்வாக வரும்.

அதெல்லாம் விட, அக்கா, மாமா, மாப்பிள்ளைன்னு எங்களை உரிமை கொண்டாடுவதற்கு பலர் இருக்கின்றனர்; அவர்கள் கொடுக்கும் பாசிட்டிவிட்டியில், நெகட்டிவிட்டி காணாமல் போய் விடும்.

சில நேரங்களில் வீடியோவுக்காக செய்யும் ரெசிப்பியின் சுவை, எதிர்பார்த்ததை விட நேர்மாறாக வந்து விடும். எவ்வளவு கஷ்டப்பட்டு, செலவு செய்து எடுத்திருந்தாலும், அதை பதிவு செய்ய மாட்டோம்.

எங்கள் வீடியோவை பார்த்து, பலரும் அவர்கள் வீட்டில் அதே உணவை சமைத்து பார்ப்பர். 'வியூவ்ஸ்' வாங்குறதுக்காக அவங்களை ஏமாத்த மாட்டோம்.

வீடியோவில் நாங்கள் பயன்படுத்தும் மசாலா, இட்லி பொடி இதையெல்லாம் பார்த்துட்டு, பலரும் அதை கேட்கின்றனர். அதனால் உணவு பொருட்கள், மசாலா தயாரிக்கும் தொழிலை துவங்கலாம் என்ற திட்டமும் இருக்கிறது.



வாசகர் கருத்து (2)

  • Dharmavaan - Chennai,இந்தியா

    இதனால் வரும் வருமானம் எவ்வளவு

  • RADE - loch ness,யுனைடெட் கிங்டம்

    நல்லது தரம் மட்டும் குறையாமல் மற்றும் அதை செய்யும் ரெசிபி முறையை மசாலா பாக்கெட்ல் பதிவு இடவும். வேண்டும் என்பவர்கள் வாங்கி சாப்பிடட்டும், விலை அதிகம் என்பவர்கள் அவர்கள் வீட்டிலே செய்து சாப்பிடட்டும். கை பக்குவம் மாறும் பொழுது அவர்களாக புரிந்துகொள்வார்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement