Load Image
Advertisement

கண்ணை கவரும் வண்ணங்கள் வயிற்றுக்கு நல்லதல்ல!

புதுக்கோட்டையில், பல கிளைகளுடன் செயல்படும், பேக்கரி மஹராஜ் நிர்வாக பொறுப்பை கவனித்து வரும் அருண்:

புதுக்கோட்டையில், என் தந்தை சீனு சின்னப்பா என்பவரால், 1982ல் துவங்கப்பட்டது பேக்கரி மஹராஜ். தன் 19 வயதில் வீட்டிலேயே பிரட் மற்றும் பிஸ்கட்டுகள் தயாரித்து சைக்கிளில் சந்தைகளில் கொண்டு சென்று விற்பனை செய்த காலத்தில், அவர் கற்றுக்கொண்ட பாடம், 'தரமும் சுவையும் தான் இந்தத் தொழிலுக்கு விளம்பரம்' என்பதைத் தான்.

ஒரு நாளைக்கு, 50 கிலோ மீட்டர் சைக்கிளில் சுற்றிய உழைப்பு தான், இந்த நிறுவனத்திற்கு இப்படிப்பட்ட உயர்வைத் தந்திருக்கிறது.

குழந்தைகளுக்கு ஏதாவது வாங்க வேண்டும் என்று நினைக்கும்போது கண்ணில் படும் வகையில் கிளைகளை பரவலாக அமைத்துள்ளோம்.

'வாடிக்கையாளர்களை தேடி அலையவிடக் கூடாது. அவர்கள் தேடும் இடத்தில் நாம் இருக்க வேண்டும்' என்ற எண்ணத்தின் விளைவு தான், இத்தனை கிளைகள்.

எங்களது, 'புட்டிங் கேக்குக்கும், ரஸ்க்குக்கும் புதுக்கோட்டை தாண்டி, வெளி மாவட்டங்களிலும் பலமான ரசிகர்கள் கூட்டம் இருக்கவே செய்கிறது.

பேக்கரி மஹராஜின் மற்றொரு சிறப்பம்சம், செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் மட்டுமே கிடைக்கும் தம்ப்ரூட்.

அதுவுமே இரண்டு மணி நேரத்தில் தீர்ந்துவிடும். இவ்வளவு விற்கிறது எனில், தம்ப்ரூட்டை எல்லா நாளும் தயாரித்து விற்க வேண்டியது தானே என்று யோசிப்பது நேர்கோட்டு சிந்தனை. செவ்வாய், வெள்ளியில் மட்டும் தான் கிடைக்கும் என்பது, 'மாத்தி யோசி'ப்பது.

எளிய மனிதர்களின் மருத்துவ கால தேவையான பிரட், பன் போன்ற உணவுகளில் லாபம் பார்க்கக் கூடாது என்ற என் தந்தையின் கொள்கையை நானும் பின்பற்றி வருகிறேன்.

அது மட்டுமல்லாமல், இவை எல்லாம் வெண்டிங் மெஷின் மூலம், 24 மணி நேரமும் கிடைக்கும்படி செய்துள்ளேன்.

எது விளம்பரம் என்று யோசித்து, புதுமையான பிறந்தநாள் கேக்குகளை வடிவமைத்து வழங்குகிறோம்.

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்கும் அனைவரின் மனதையும் கவரும் வகையில் வடிவமைப்பை தாண்டி, அதன் சுவையும் உள்ளது.

இது, விழாவில் பங்கேற்கும் எல்லாரை யும் எங்கள் வாடிக்கையாளர்களாக மாற்றி விடுகிறது. அரசு அனுமதித்துள்ள அளவுக்கும் குறைவாக மட்டுமே நாங்கள் வண்ணங்கள் பயன்படுத்துகிறோம். பேக்கரி பொருட்களில், வண்ணங்கள் கண்களை கவரும்.

ஆனால், வயிற்றுக்கு நல்லதல்ல. இளைய தலைமுறை வண்ணங்களை தவிர்த்தால், வாழ்க்கை வண்ணமயமாக இருக்கும்.

வண்ணங்களில் இல்லை சுவை என்பதை உணர்ந்து, இளைய தலைமுறை எங்கள் வண்ணங்கள் தவிர்க்கும் முயற்சிக்கு ஆதரவு தர வேண்டும்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement