Load Image
Advertisement

அறிவியல் ஆயிரம்

அதிவேக சமையல்


'மைக்ரோவேவ் ஓவன்' பல இடங்களிலும் பயன்படுத்தப் படுகிறது. டிச. 6ல் சர்வதேச மைக்ரோவேவ் ஓவன் தினம் கடைபிடிக்கப்படுகிறது. லண்டன் பேராசிரியர்கள், 'அல்ட்ரா ஷார்ட்' எனும் மின் காந்த அலைகளால் இயங்கும் ஒரு சாதனத்தை 1940ல் உருவாக்கினர். பெயர் 'மேக்னட்ரான்'. பின் அமெரிக்க நிறுவனம் இதில் சில மாற்றங்களை செய்தது. இது நுண்மின் அலைகள் எனும், 'மைக்ரோ வேவ்ஸ்' நீர் அணுத்திரள்களை அதி வேகத்தில் இயங்க செய்யும். இது உருவாக்கும் வெப்ப அலை, சாதாரண வெப்ப அலையை விட வினாடிக்கு, 2450 மில்லியன் மடங்கு அதிகம். இது அதிவேக சமையலுக்கு உதவுகிறது.



தகவல் சுரங்கம்


ஆழமான சுரங்கப்பாதை


சுவிட்சர்லாந்தில் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் 'கோதர்டு பேஸ்' ரயில் சுரங்கப்பாதை செயல்பாட்டில் உள்ளது. இது அந்நாட்டின் எர்ஸ்பீல்டு - போடியோ நகரை இணைக்கிறது. நீளம் 57.09 கி.மீ. இரு வழி ரயில் பாதையாக உள்ளது. இதில் மணிக்கு 230 கி.மீ., வேகத்தில் ரயில்கள் செல்லும். இது 8040 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுமானப்பணி 1999ல் தொடங்கி 2016ல் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. இது உலகின் நீளமான, ஆழமான ரயில் சுரங்கப்பாதை என அழைக்கப்படுகிறது. இப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் ஜப்பானின் செய்கென் சுரங்கப்பாதை (53.9 கி.மீ.,) உள்ளது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement