Load Image
Advertisement

'டவுட்' தனபாலு

த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன்: தெலுங்கானாவில் ஆளுங்கட்சி ஏன் தோற்றது என்பது அனைவருக்கும் தெரியும். முதல்வர் சந்திரசேகர ராவின் ஊழல், குடும்ப அரசியல் ஆதிக்கத்தால், மக்கள் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

டவுட் தனபாலு: தெலுங்கானா போலவே, இன்னும் சில மாநில அரசுகள்ல ஊழல், குடும்ப அரசியல் கொடி கட்டி பறக்குது... அவங்க எல்லாம் இனியும் சுதாரிக்கவில்லை என்றால், இன்று சந்திரசேகர ராவுக்கு ஏற்பட்டதை விட மோசமான தோல்வியை சந்திப்பாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!

lll

உ.பி.,யில் செயல்படும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி: நான்கு மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் ஒருதலைப்பட்சமாக இருக்கும்போது, நாட்டு மக்களுக்கு சந்தேகமும், கவலையும், ஆச்சரியமும் ஏற்படுவது இயல்பு தான். இதுபோன்றஒரு விசித்திரமான தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்வது மிகவும் கடினம்.

டவுட் தனபாலு: அப்படி என்றால், தெலுங்கானாவில் காங்., கட்சி ஜெயித்துள்ளதே... அதுல, உங்களுக்கு எந்த, 'டவுட்'டும் வரலையா... பா.ஜ., வெற்றியை கேள்வி கேட்பதா நினைத்து, அந்த மாநில வாக்காளர்களை நீங்க அவமானப்படுத்துறீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!

lll

அமலாக்க துறை அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்த அரசு டாக்டர் சுரேஷ்பாபு:
அமலாக்க துறை அதிகாரி அங்கித் திவாரி, என்னை பணம் கேட்டு மிரட்டினார். நானும் பயந்துபோய் முதலில், 20 லட்சம் ரூபாய் கொடுத்தேன். அடுத்தகட்டமாக எனக்கு பணம் கொடுக்க விருப்பம் இல்லை. இதனால் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தேன்.

டவுட் தனபாலு: மடியில கனம் இல்லன்னா வழியில பயப்பட வேண்டாமே... மெத்த படிச்ச டாக்டரான நீங்களே, இந்த மிரட்டலுக்கு எல்லாம் பயப்படலாமா... அப்பவே, அவர் மேல போலீஸ்ல புகார் கொடுக்காம, சுளையா, 20 லட்சம் ரூபாயை துாக்கி கொடுத்தது தானே, உங்க மீதான, 'டவுட்'களை அதிகப்படுத்துது!

lll



வாசகர் கருத்து (3)

  • duruvasar - indraprastham,இந்தியா

    டாக்டர் ஐயா குழந்தை மருத்துவர் என தோன்றுகிறது. குழந்தை தனமாக எடுத்த எடுப்பிலேயே 20 லட்சம் ரூபாயை தூக்கி கொடுத்துவிட்டார். சரியான வெள்ளந்தியாக இருக்கிறார். இவரை விட இவரது மனைவியும் பச்சிளம் குழந்தையாக யிருக்கிறார் என்ற செய்தி இருவர் மீதும் பச்சாதாபாத்தை தான் வரவழைக்கிறது. .

  • rajan - erode,இந்தியா

    லஞ்சம் கேட்பது அமலாக்கத்துறையின் கொள்கை லஞ்சம் ஒரு தடவை கொடுத்தால் மறுமுறை கொடுப்பான் என்று செயல்பட்ட லஞ்ச ஒழிப்பு துறை தேசபக்தியை காட்டுகிறது இவர்கள் பற்றி வாய் திறக்காத மோடி எப்படிப்பட்டவர் தேர்தல் பாத்திரம் என்ற பெயரில் கருப்புப்பணத்தை சட்டபூர்வமாக வெள்ளை பணம் என்று சொல்லும் மோடி

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    இருபது லட்சம் கொடுத்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முயன்றார் என்றால், பல கோடிகள் வெளிவராதிருக்க என்பது தெரிகிறதே

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement