Load Image
Advertisement

சிவன் சம்பா நெல் சாகுபடி செய்ததில் ரூ.60,000 லாபம்!



திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி முருகன்:

திருநெல்வேலி, தாழையூத்து அருகே உள்ள ராஜவல்லிபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது, என் வீடும், விளைநிலமும்.

மக்களிடம் அதிக வரவேற்பு உள்ள பாரம்பரிய நெல் ரகங்களை சரியாக கண்டுணர்ந்து, அவற்றை அதிக பரப்பிலும், விற்பனை வாய்ப்பு குறைவாக உள்ள நெல் ரகங்களை குறைந்த பரப்பிலும் சாகுபடி செய்யும் சாமர்த்தியமான விவசாயிகள், விளைவித்த நெல்லை எளிதாக சந்தைப்படுத்தி வருகின்றனர்.

கடந்த ஆறு ஆண்டு களாக இயற்கை விவசாயம் செய்து வரும் நான், சிவன் சம்பா நெல் ரகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன். சிவன் சம்பா அரிசி நல்ல சன்னமாக இருக்கும். இதில் சோறு சமைத்தால், நல்லா சுவையாக இருக்கும்.

நவீன ரக அரிசி சாப்பிட்டு பழக்கப்பட்டு போன மக்கள், சன்ன ரக அரிசியை தான் அதிகம் விரும்புவர். பாரம்பரிய நெல் ரகங்கள் பெரும்பாலும் மோட்டா ரகமாக இருப்பதால் தான், அதை வாங்க தயக்கம் காட்டுகின்றனர்.

என்னிடம் மொத்தம், 2.5 ஏக்கர் நிலம் இருக்கு. சிவன் சம்பா 1 ஏக்கரிலும், மாப்பிள்ளை சம்பா, கருடன் சம்பா, கருப்புக்கவுனி, ஆத்துார் கிச்சிலி சம்பா உள்ளிட்ட மற்ற பாரம்பரிய நெல் ரகங்களை, 1.5 ஏக்கரிலும் சாகுபடி செய்து வருகிறேன். மற்ற ரகங்களை விட சிவன் சம்பாவில் மகசூலும் அதிகம் கிடைக்கும்.

போன ஆண்டு 1 ஏக்கரில் சிவன் சம்பா நெல் சாகுபடி செய்ததில், 1,560 கிலோ நெல் மகசூல் கிடைத்தது. அதில், 60 கிலோவை விதை நெல்லாக எடுத்து வைத்துக் கொண்டேன்; அதோட மதிப்பு, 4,200 ரூபாய். 1,500 கிலோ நெல்லை அரிசியாக மாற்றியதில், 900 கிலோ அரிசி கிடைத்தது.

இதை, 1 கிலோ, 90 ரூபாய்க்கு விற்பனை செய்ததன் மூலம், 81,000 ரூபாய் வருமானம் கிடைத்தது. தவிடு, குருணை விலை மதிப்பு, 5,000 ரூபாய். வைக்கோல் விற்பனை மூலம், 6,000 ரூபாய் வருமானம் கிடைத்தது.

ஆக, 1 ஏக்கர் சிவன் சம்பா சாகுபடி மூலம் மொத்தம், 96,200 ரூபாய் வருமானம் கிடைத்தது. சாகுபடி செலவு, அரிசி அரவைக்கூலி உள்ளிட்ட செலவுகள் போக, 60,000 ரூபாய் நிகர லாபமாக கிடைத்தது.

நான் உற்பத்தி செய்யக்கூடிய அரிசியை எங்கள் பகுதி மக்களிடம் நேரடியாக விற்பனை செய்வதோடு மட்டுமல்லாமல், 'வாட்ஸாப்' குழுக்கள் மூலம் கிடைத்த வெளியூர் வாடிக்கையாளர்களுக்கும் அனுப்புகிறேன்.

பாளையங்கோட்டையில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும், இயற்கை விவசாயிகள் ஒன்று கூடி நடத்தும் வாரச் சந்தையிலும், என்னோட அரிசியை விற்பனை செய்கிறேன்.

பல வழிகளிலும் சந்தை வாய்ப்புகளை பயன்படுத்துவதால், விற்பனையில் பெருசா சொல்லும் அளவுக்கு சிரமங்கள் இல்லை.

தொடர்புக்கு:

95667 03860



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement