Load Image
Advertisement

போலி ஆணை ஏமாற்றியவர் கைது

தென்காசி:தென்காசி மாவட்டம் கடையநல்லுார் அருகே கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் லட்சுமணன், 35, தி.மு.க., பிரமுகர். ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார்.

அதே பகுதியை சேர்ந்த பாண்டியராஜன் மற்றும் பாலமுருகனிடம், தமிழக அரசு வேலை வாங்கி தருவதாக கூறி லட்சுமணன் லட்சக்கணக்கில் பணம் வாங்கினார்.

இன்னொரு பெண்ணிடமும் 4 லட்சம் ரூபாய் வாங்கினார். யாருக்கும் அரசு பணி வாங்கி தரவில்லை. அரசு பணி போல போலியான நியமன ஆணைகளை கொடுத்தார். அந்த ஆணைகள் போலியானது என தெரிந்ததால் கடையநல்லுார் போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் லட்சுமணனை கைது செய்தனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement