Load Image
Advertisement

தென்னகத்து ‛சொல்லரசி': பட்டிமன்ற நடுவர் எஸ்.அன்னபாரதி

பிடித்தது பாயாசமா... ஐஸ்கிரீமா...'என பட்டிமன்ற வாழ்க்கைக்கு அச்சாரம் போட்டு. இன்று பல நாடுகளில் பல்லாயிரம் மேடைகளில் வலிமையான பேச்சு திறனால், 'செந்தமிழ் செல்வி', 'சொல்லாசி' விருதுகளை குவித்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு திடலில் முதல் பெண் வர்ணனையாளராக கர்ஜித்தவர் தென்தமிழகத்து சொல்லரசி எஸ்.அன்னபாரதி.
இவர் அளித்த பேட்டி: பிறந்தது திருநெல்வேலி அருகே கரையிருப்பு, பிளஸ் 2 வரை படித்தேன். திருமணம் முடிந்து கோவில்பட்டி வந்துவிட்டேன். கணவரின் ஊக்கமே உயர்கல்விக்கு அழைத்து சென்றது. கோவில் பட்டியில் எம்.எஸ்சி., முடித்து, பாரதியார் பல்கலையில் எம்.பில்., (எலக்ட்ரானிக்ஸ்) முடித்தேன். என் அம்மாவிற்கு, பாரதியாரை அதிகம் பிடிக்கும். அதனாலேயே எனக்கு அன்னபாரதி என பெயரிட்டார்.

பிடித்தது பாயாசமா... ஐஸ்கிரீமாசிறுவயதில் இருந்தே திருக்குறளை ஆர்வமாக படிப்பேன். இதுவே என் தமிழ்பற்றுக்கு காரணம். 6வது வயதில் பள்ளியில் நடந்த பட்டிமன்றத்தில் தான் கன்னிபேச்சை துவக்கினேன். குழந்தைகளுக்கு பிடித்தது பாயாசமா, ஐஸ்கிரீமா என்ற தலைப்பில் நடந்த பட்டிமன்றத்தில் பாயாசம் என்ற தலைப்பில் பேசினேன். அப்படி என் மேடை வாழ்க்கை துவங்கியது. வானொலியிலும் பேசியிருக்கிறேன்.

'செந்தமிழ் செல்வி', 'சொல்லரசி' விருது பற்றிபட்டிமன்ற பேச்சாளர், நடு வர் என 2010ல் இருந்து களத்தில் உள்ளேன். வெளிநாடுகள் உட்பட 4000 க்கும் மேற்பட்ட மேடைகளில் தடம் பதித்துள்ளேன். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நின்று கொண்டே நகைச்சுவையாக பேசுவேன். இப்படித் தான் 'செந்தமிழ் செல்வி', 'சொல்லாசி' என்ற விருதுகள் வசமானது.

சினிமாவில் எள்ள கேரக்டராக விருப்பம்குணசித்திர நடிகையாக வலம் வர வேண்டும் என்ற ஆசை உள்ளது. 'எதற்கும்" துணிந்தவன் படத்தில் சூர்யாவின் சகோதரியாக, 'குற்றம் குற்றமே', 'வீர பாண்டியபுரம்' திரைப் படங்களில் நடித்துள்ளேன்.செங்களம் 'வெப் சீரியலில் நடித்துள்ளேன். கொரோனா கால கட்டத்தில் பட்டிமன்றம் அதிகம் நடத்த முடியாத சூழலில், சினிமாவில் அதுவும் தென்மாவட்ட பகுதியில் நடிக்க வாய்ப்பு வந்ததால் ஆவலுடன் அந்த துறைக்கு சென்றேன்.பட்டிமன்ற பெண் பேச்சாளர் என்ற தகுதியின் அடிப்படையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு 'வைல்ட் கார்டு' எண்ட்ரியாக சென்றேன். பங்கேற்பாளர்கள் அனைவரிடமும் சண்டை போடுவதை தான் எதிர்பார்க்கின்றனர். அங்கு சண்டைகளின் ஆட்சி தான் நடக்கிறது. நான் ‛ கடி ஜோக்' அடிப்பவள். பட்டிமன்ற பேச்சாளராக செயல்பட்டேன். அலைபேசி இன்றி, குடும்பத்தை பிரிந்து என்னால் அங்கு பங்கேற்க முடியாததால் 10 நாளில் வந்துவிட்டேன்

பெண்கள் பட்டிமன்ற பேச்சாளராக வர...பெண்கள் பட்டிமன்ற பேச்சாளராக வர விரும்புகின்றனர். அவர்கள் உலக நடப்பை படிக்க வேண்டும். புத்தகம் படிக்க வேண்டும் , கவிதை பாட்டுக்களை அன்றாடம் சேகரித்து கொள்ள வேண்டும். ஒரு பேச்சாளர் மேடையில் என்ன பேச வேண்டும் என்பதை விட என்ன பேசக்கூடாது என்பதை புரிந்து செயல்பட வேண்டும். அன்றாடம் புது தகவல்களை தேடி அதை டைரியில் எழுதி வைப்பேன். இதுவரை அதுபோன்று 7 டைரிகளில் எழுதி வைத்துள்ளேன்.

ஜல்லிக்கட்டு வர்ணனையாளர்...மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பெண் வர்ணனையாளர் என்ற தனி அடையாளத்தை பெற்றேன். அன்று காலை 7:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நேரடி வர்ணனை செய்ததை பலரும் பாராட்டினர். பேச்சாளர், நடுவர், நடிகை என எந்த துறைக்கு சென்றாலும் என்னை ‛மைக்' விடாமல் துரத்துவதால், பட்டிமன்ற நடுவர், பேச்சாளர் ஆக வலம் வரவே அதிகம் ஆசைப்படுகிறேன் என்றார்.வாசகர் கருத்து (5)

  • Narasimhan - Manama,பஹ்ரைன்

    இவரை வளர்த்து விட்ட மதுரை முத்தை பற்றி ஒரு கருத்தும் இல்லையே. வளர்த்து விட்டவர்களை மறப்பவர்கள் பெரும்பாலும் தமிழர்களே

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement