Load Image
Advertisement

வாழவைக்கும் வைகையை காக்கலாம் வாங்க...

நதிகளை தாயாக பார்ப்பது நம் பாரத கலாசாரம். தாய்ப்பாலுாட்டுவது போல வைகையும் மதுரை மக்களான நமது சாகுபடிக்கும், தாகம் தீர்க்கவும் உதவுகிறாள். சங்க கால பெருமைபெற்ற மதுரையின் வைகையை நினைத்தாலே நமக்குள் பாசமும், நேசமும் ஊற்றெடுக்கும்.

இயற்கை மாற்றத்தால் வைகையில் வறட்சி வாடிக்கையாகிவிட்டது. கழிவுகளும் சேர துவங்கிவிட்டன. தாய் மீதான தாக்குதலை தமயன்களே துவங்கிவிட்டனர். குப்பை, கழிவுநீரை அங்கு கொண்டு சேர்க்கின்றனர். 80க்கும் மேலான இடங்களில் கழிவுநீர் சேர்வதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதனை காப்பாற்ற வைகைநதி மக்கள் இயக்கத்தை துவக்கினார் மதுரையை சேர்ந்த ராஜன். 42 வயதுக்குள்ளேயே வைகையை கரைத்துக் குடித்து, 'வைகை மடியில்' எனும் நுாலை எழுதியுள்ளார்.

வைகையின் நீராதாரமான மேகமலை, வெள்ளிமலையை புலிகள் காப்பகமாக அறிவிக்க இவர் உட்பட சிலர் வலியுறுத்தியதால், 2021ல் மத்திய அரசு அறிவித்தது. 2017ல் 'தட்சிண கங்கையான' வைகையை பாதுகாக்க மத்திய அரசு ரூ.120 கோடி ஒதுக்கியது. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டபோது, முதற்கட்டமாக ஒதுக்கிய ரூ.68 கோடியை மெட்ரோ குடிநீர் வடிகால் வாரிய பயன்பாட்டுக்கு எடுத்தது தெரியவந்தது. இதற்காக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் கூறியதாவது: 25 பொறுப்பாளர்கள், 5 ஆயிரம் உறுப்பினர்களுடன் எங்கள் இயக்கம் செயல்படுகிறது. கழிவுகளால் வைகை பாழடைவதை சகிக்க இயலவில்லை. 10 ஆண்டுளாக கரையோர மக்களிடம் துண்டு பிரசுரம் வினியோகித்து, உறுதிமொழி எடுக்க வைத்து, வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டி, விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன்.

கரையோரத்தை திறந்தவெளி கழிப்பறையாக்குவதை தவிர்க்க பராமரிப்பின்றி கிடந்த 20 கழிப்பறைகளை மாநகராட்சி பராமரிக்க ஏற்பாடு செய்தேன். கழிவுநீர் கலப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம், கையெழுத்து இயக்கம் நடத்தினோம். அரசு மருத்துவமனை கழிவுகள் கலப்பதை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். நீதிமன்றமே குழு அமைத்து அறிக்கை பெற்று நடவடிக்கை எடுத்தது. தற்போது அரசு மருத்துவமனையில் கழிவுநீர் சுத்திகரிக்கும் பணிகள் ரூ.2 கோடியில் நிறைவேற உள்ளன. 36 இடங்களில் கழிவுநீர் கலப்பதை நிறுத்தி உள்ளனர்.

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ெஷகாவத்திடம் வைகை அணையை துார்வார மனு கொடுத்தோம். எனது பணியை பாராட்டி 100வது மன்கிபாத் நடந்த போது, கவர்னர் ஆர்.என். ரவி நான் உட்பட பலரை ராஜ்பவனுக்கு அழைத்து பாராட்டினார். மக்களுக்கு வைகை தாய் போன்றவள் என்ற உணர்வு ஏற்பட வைகை பெருவிழா கொண்டாடுகிறோம்.

எல்லா பவுர்ணமி நாட்களிலும் காசியில் நடப்பது போல தீபாராதனை நடத்த உள்ளோம். 2018ல் தியாகி அன்னாஹசாரே, தண்ணீர் மனிதர் ராஜேந்திரசிங்கை அழைத்து வைகை பாதுகாப்பு மாநாடு நடத்தினோம். வைகையின் 12 கி.மீ., தொலைவை 500 மீ.,யாக பிரித்து கல்லுாரி மாணவர்கள், குடியிருப்போர் நலச்சங்கத்தினர், சமூக ஆர்வலர்களைக் கொண்டு பராமரிக்க உள்ளேன், என்றார்.

அவரது முயற்சிக்கு கரம் சேர்க்கடயல் பண்ணுங்க: 99442 55228.வாசகர் கருத்து (2)

  • kumaresan - madurai ,இந்தியா

    வருடந்தோறும் கங்கையில் பூஜை நடப்பதை, மதுரை வைகையின் இரு கரைகளிலும் மக்கள் வரிசையாக நின்று விளக்கேற்றி வைகை நதியை பூஜை செய்ய வேண்டும். மல்லிகை, சம்பங்கி, துளசி போன்ற நறுமண பொருட்களால் பூஜை செய்து வழிபட, நதியை பூஜக்கவும் , அசுத்தம் செய்யாமல் இருக்கவும் பழகுவோம் . நன்றி

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement