Load Image
Advertisement

என்னிடம் ரசிகர்கள் செல்பி எடுக்க ஆசை மதுரை ஷியாமளாவின் சினிமா கனவு

திறமை, அழகு, கவர்ச்சி கொட்டிக்கிடந்தாலும் சினிமாவில் சாதிக்க நேரமும் நமக்கு 'ஒர்க்அவுட்' ஆனாதான் அது சாத்தியம். அந்த 'நேரம்' வரும் வரைக்கும் மக்கள் மனதில் நிற்கும் வகையில் அக்கா, தங்கை, மனைவி, அண்ணன் மனைவி... என கிடைக்கும் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வருகிறார் மதுரை ஷியாமளா.

தினமலர் சண்டே ஸ்பெஷல் பகுதிக்காக அவர்...

சாதனை பெண்களை அடையாளப்படுத்தும் தினமலர் சண்டே ஸ்பெஷல் பகுதியை தவறாமல் படித்து விடுவேன். என் பேட்டி வராதா என காத்துக்கிடந்த நேரத்தில் இப்படி ஒரு வாய்ப்பா.

இதுவரை 'கணவர் பெயர் ரணசிங்கம்' 'எதற்கும் துணிந்தவன்', 'கிளாஸ் மேட்' உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். சுந்தரி என்ற டிவி சீரியலிலும், 15க்கும் மேற்பட்ட குறும்படங்களிலும் நடித்துள்ளேன்.

சிறுவயது முதல் சினிமாவில் நடிக்க ஆசை இருந்தது. ஆசையை நிறைவேற்றும் கணவரும் கிடைத்தார். திருமணத்திற்கு பின்பும் என் சினிமா நடிப்பில் பாதிப்பில்லை. 'கணவர் பெயர் ரணசிங்கம்' படத்திற்காக ஆர்ட்டிஸ்டுகள் தேர்வு மதுரையில் நடந்தது. அதில் தேர்வாகி சினிமாவிற்குள் நுழைந்தேன்.

மதுரை இயக்குநர் விக்டர், சினிமா ஏஜன்ட் வினோத் மூலம் வாய்ப்புகள் கிடைத்தது. தற்போது சென்னையில் இருந்தும் அழைப்புகள் வருகின்றன. கிளாமர் ரோலில் நடிக்க வாய்ப்பு வரும். அதை தவிர்த்து விடுவேன். பெரிய சான்ஸ் கிடைக்காவிட்டாலும் கிடைக்கிற வாய்ப்புகளில் நல்ல கேரக்டரை தேர்வு செய்து நடிக்கிறேன். சினிமா வாய்ப்பு இல்லாத நேரத்தில் இன்ஸ்டாவில் ரீல்ஸ்கள் பதிவிடுவது எனக்கு பிடிக்கும். இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் கூட சில சினிமா வாய்ப்பு கிடைத்தது.

சாதிக்க வேண்டும் என வாய்ப்புகளுக்காக காத்திருப்பவர்கள் பலரை பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளேன். என்னை பொறுத்தவரை சினிமாவில் வாய்ப்பு கிடைத்தால் நானும் சாதிப்பேன். இல்லையென்றால் 'ஏய்...இவங்க சினிமாவில் நடிக்கிறவுங்க...' என ரசிகர்கள் கண்டுபிடித்து எங்கிட்ட ஆசையா வந்து என்னுடன் 'செல்பி' எடுக்கும் அளவிற்காவது பிரபலமாக வேண்டும் என்பது தான் என் ஆசை என்கிறார் இந்த புதிய பறவை 'பரவை' ஷியாமளா.



வாசகர் கருத்து (1)

  • David DS - kayathar,இந்தியா

    சினிமா வாய்ப்புகளுக்காக எதையெல்லாமோ எத்தனை முறையோ தியாகம் செய்து இவர் போன்ற பெண்கள் வெளிச்சத்திற்கு வருகிறார்கள். ஆனால் வெளிச்சத்திலேயே நீண்ட நாள் வாழ்வது மிகவும் சிலர் தான். இவர் போன்றவர்கள் பாவம்,

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement