Load Image
Advertisement

கலாசாரம் கூறும் கட்டில் - விருதிற்கு காத்திருக்கும் கணேஷ்பாபு

சர்வதேச, தேசிய விருதுகளை பெறும் நோக்கத்தில் கலை நுணுக்கத்துடன் படம் எடுப்பவர்கள் வரிசையில் இவருக்கு கட்டாயம் இடம் உண்டு. இவர் இயக்கி தயாரித்த கருவறை குறும்படம் சிறந்த இசையமைப்பாளர் பிரிவில் தேசிய விருதை இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு பெற்று கொடுத்திருக்கிறது. இவர் ரிலீஸ் செய்ய உள்ள கட்டில் திரைப்படம் தேசிய விருது பெறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.
கதையாசிரியர், திரைக்கதை, இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பல பரிமாணங்களும் இவருக்கு உண்டு. இப்பெருமைக்கு சொந்தக்காரர் கட்டில் பட இயக்குனர், கதாநாயகன் இ.வி.கணேஷ்பாபு.

தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக அவர் பேசியதிலிருந்து...
தஞ்சாவூர் சொந்த ஊர். 1999ல் பாரதி படத்தில் மருமகன் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிட்டியது. எட்டையபுரம், கடையநல்லுார் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. பாரதியார் காலத்தைச் சேர்ந்தவர்கள் முதியவர்களாக இருந்தனர். அவர்களுடன் பேசி பாரதியார் குறித்து அறிந்தது மறக்க முடியாது.
ஆட்டோகிராப், கற்றது தமிழ், ஆனந்தபுரத்து மாளிகை, பிரண்ட்ஸ், கீதை, பகவதி, சிவகாசி என 42 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறேன். குறும்படங்கள், சீரியல்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறேன். எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் ஒருத்தி என கதாநாயகனாக நடித்த குறும்படம் 14க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கியது.யமுனா என்ற திரைப்படத்தை இயக்கினேன். அந்தகாலகட்டத்தில் பெரிய படங்கள் ரீலிஸ் ஆனதால் இந்த படம் பேசப்படவில்லை. 'கருவறை' பல விழாக்களில் திரையிடப்பட்டது. நான் ஐந்து பிரிவுகளில் தேசிய விருதுக்கு விண்ணப்பித்தேன். ஸ்ரீகாந்த் தேவாவிற்கு தேசிய விருது பெற்று தந்தது. டில்லியில் ஜனாதிபதி முர்மு கையால் அவர் விருது பெற்ற விழாவில் பங்கேற்றேன்.

என் 2வது படம் கட்டில். தயாரித்து இயக்கி நடித்து இருக்கிறேன். நான்குமொழிகளில் எடுத்திருக்கிறோம். தமிழில் நவ., 24ல் ரிலீஸ் ஆக உள்ளது. கமர்சியல் கலை அம்சத்துடன் படத்தொகுப்பாளர் லெனின் கூறிய நடந்த கதையை மையமாக வைத்து எடுத்துள்ளோம். வீடுகளில் முன்னோர் பயன்படுத்திய பொருட்களை பத்திரமாக வைத்திருப்போம். அவற்றின் மூலம் நம் கலாசாரம், பூர்வீகத்தை அறிய முடியும்.
இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே மும்பை, நாக்பூர் உள்ளிட்ட பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை பெற்றுள்ளது. இந்த படத்தை பார்த்த முக்கிய நபர் ஒருவர் தன் பூர்விக வீட்டை விற்க இருந்த முடிவை மாற்றிக் கொண்டார். கட்டாயம் தேசிய விருது பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. சினிமா குடும்பத்தை சேர்ந்தவர் என்றாலும் ஒரு படத்தில் கூட நடிக்காத இயக்குனர் பாலசந்தர் மருமகள் கீதாகைலாசத்தை நடிக்க வைத்துள்ளேன்.
சினிமாத்துறையில் படம் எடுப்பது எளிது. வெளியிட தான் மெனக்கெட வேண்டியிருக்கிறது. ஓரிரு வளர்ந்த இயக்குனர்கள் கூட மற்றவர்கள் வளர்ந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றனர். அதையும் தாண்டி சிலர் சாதிக்கின்றனர். அந்த வரிசையில் நானும் இடம் பிடிப்பேன் என்றார்.
வாழ்த்த 91505 66759வாசகர் கருத்து (1)

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    அந்த ஓரிரு இயக்குனர்களின் லிஸ்டில் பலரும் ஞாயிறு ஞாயிறு அட்டெண்டன்ஸ் போடுபவர்களாக இருப்பார்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement