Load Image
Advertisement

தமிழமுதம் தந்து தமிழ் அமுதமாக வாழ்ந்த 'மதுர மகாகவி'!


சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று மாலை ஒரு அருமையான விழா.

மதுர மகாகவியாக வாழ்ந்து மறைந்திட்ட வி.வே.முருகேச பாகவதர் அவர்களின் தமிழ்ப் பொக்கிஷங்களை மீட்டெடுத்து வழங்கும் உன்னத விழா

1897 ஆம் ஆண்டு பிறந்து 1974 ஆம் ஆண்டு மறைந்திட்ட மாமேதை அவர்.

மரபுக்கவிதைகள்,இசைத் தமிழப்பாடல்கள் பல வழங்கியவர்.

நான் மன்னனாக இருந்திருந்தால் ஒரு சிற்றுாரையே இவரது தமிழுக்கு சன்மானமாக வழங்கியிருப்பேன் என திரு வி.க.போன்றவர்களால் பாராட்டப்பபெற்றவர்.

இவரது பாடல்களில் தீண்டாமை ஒழிப்பு,சாதி ஒழிப்பு போன்ற சமூக கருத்துக்களை நிறைந்து காணப்படும்.பழந்தமிழ் இசைக் கீர்த்தனைகளை மரபுப்படி புதுப்பித்தவர்.இவரது சமரச சன்மார்க்கப் பாடல்களும்,மதுவிலக்கு குறித்த பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் உள்ள மேடைகளில் பாடப்பட்டதாகும்.இவரது நுால்கள் யாவும் 2021 ஆம் ஆண்டு அரசுடமையாக்கப்பட்டது.இவரது பாடல்கள் பலவும் 'தமிழமுதம்' என்ற தலைப்பில் புத்தகமாக வெளியாகியுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இதைக்குறிப்பிட்டு, தமிழமுதம் தந்து தமிழ் அமுதமாகவே வாழ்ந்திட்டவர் மதுர மகாகவி என்று பராட்டியுள்ளார்.

முந்தைய தலைமுறைத் தமிழர்களின் சிந்தனை மரபுகளை அவர்கள் அள்ளித்த தந்த தமிழின் இலக்கியப் புதையல்களை மீட்டெடுத்து மீள் உருவாக்கம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் போற்றப்பட வேண்டியவர்கள்.

இப்படிப்பட்ட போற்றுதலுக்குரிய பணியை செய்திருப்பவர் அவரது பேத்தி முருகு சுந்தரேச புனிதவதியாவார்.

இதற்காக நடைபெற்ற விழாவில் தமிழறிஞர்கள்,பேராசிரியர்கள்,பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மதுர மகாகவியின் பேரனும்,மூத்த பத்திரிகை புகைப்படக்கலைஞருமான குமரேசன் விழாவிற்கு வந்திருந்தவர்களை வரவேற்று பேசினார்.

மதுர மகாகவியின் படைப்புகள் யாவும் பொதுவெளியில் மீண்டும் உலா வரட்டும், தமிழ் சமுதாயம் படித்து பயனுறட்டும்

-எல்.முருகராஜ்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement