Load Image
Advertisement

50 ஆண்டுகளாக அனுபவித்த அரசு நிலம் மீட்பு ரூ.1,000 கோடி! மற்ற ஆக்கிரமிப்பு இடங்களை கைப்பற்றவும் திட்டம்

சென்னை,பரங்கிமலை, ஆலந்துார் மற்றும் பல்லாவரம் கன்டோன்மென்ட் பகுதியில், குத்தகை காலம் முடிந்தும் அனுபவிக்கப்பட்டு வந்த 1,000 கோடி ரூபாய் மதிப்புடைய, 4.50 ஏக்கர் அரசு நிலம், வருவாய் துறையினரால் அதிரடியாக மீட்கப்பட்டது. இதுபோல், ஆக்கிரமிப்பில் உள்ள மற்ற நிலங்களையும் மீட்க, வருவாய் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சென்னை, பரங்கிமலை பட்ரோடு பகுதியில், சர்வே எண்: 480, 458; ஆலந்துார் ஜி.எஸ்.டி., சாலையில் சர்வே எண்: 1,352, 437; பல்லாவரம், கன்டோன்மென்ட் பகுதியில் சர்வே எண்: 34ல் அரசு நிலங்கள் உள்ளன.

மொத்தம் 4.50 ஏக்கர் அளவுடைய வருவாய் துறையின் நிலங்களை, அப்பகுதியைச் சேர்ந்த சிலர் 50 ஆண்டுகளாக அனுபவித்து வந்தனர்.

குத்தகை காலம் முடிந்த நிலையில், அரசிடம் அவர்கள் ஒப்படைக்கவில்லை.

பலர் கைமாறி டோமினிக் சேவியர், ஹேமலதா மற்றும் நிசாருதீன் உள்ளிட்டோர், அந்நிலங்களுக்கான குத்தகை பணமோ, வாடகையோ அளிக்காமல், வணிக நோக்கில் பயன்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில், அரசுக்குச் சொந்தமான இந்த இடங்களை மீட்க, செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார்.

இதையடுத்து, பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம், வருவாய் ஆய்வாளர் ரம்யா உள்ளிட்ட வருவாய் துறையினர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன், நேற்று காலை ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

இதில், விக்டோரியா பெத்தேல் திருச்சபை மற்றும் 30க்கும் மேற்பட்ட கடைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

பின், அவற்றுக்கு அதிகாரிகள், 'சீல்' வைத்தனர். மேலும், கடைகளின் பெயர் பலகை, தடுப்பு சுவர் உள்ளிட்டவை 'பொக்லைன்' இயந்திரம் வாயிலாக அகற்றப்பட்டன.

இது குறித்து, பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் கூறியதாவது:

பரங்கிமலை பட்ரோடு, ஆலந்துார் ஜி.எஸ்.டி., சாலை, பல்லாவரம் கன்டோன்மென்ட் ஆகிய பகுதிகளில் அரசுக்குச் சொந்தமான, 4.5 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் குத்தகைக்கு எடுத்தவர்கள், அந்த இடங்களை வணிக நோக்கில் மேல் வாடகைக்கு விட்டு சம்பாதித்து வந்தனர்.

அவர்களுக்கு, 'நோட்டீஸ்' வழங்கியும் கண்டுகொள்ளாததால், உடனடியாக அகற்றப்பட்டுள்ளது.

இந்த இடங்களில் இயங்கி வந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஆதரவற்றோர் இல்லம் ஆகியவற்றிற்கு 'சீல்' வைக்காமல், 10 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள சிறார்களை, அரசு காப்பகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மீட்கப்பட்ட நிலங்களின் மதிப்பு, 1,000 கோடி ரூபாய்.

சென்னை, புறநகர் பகுதிகளில் அரசு நிலத்தில் குத்தகை காலம் முடிந்தும், நிலத்தை ஒப்படைக்காமல் உள்ள இடங்கள், ஆக்கிரமிப்பு இடங்களை மீட்கும் பணி தொடர்ந்து நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மீட்கப்பட்ட இடத்தில் கல்லுாரி
குத்தகைக்கு எடுத்த அரசு நிலங்களை மீட்பது, மிகவும் வரவேற்கத்தக்கது. மீட்கப்பட்ட இடத்தில், ஆலந்துார் மண்டல மக்களின் தேவைகளை நிறைவேற்ற, உடனடியாக ஒதுக்க வேண்டும். துணை மின் நிலையம், நவீன வசதிகள் உடைய மருத்துவமனை, மகளிர் கல்லுாரி உருவாக்க வேண்டும் என்பது, இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. அவற்றை அமைக்க, மீட்கப்பட்ட இடத்தை ஒதுக்க, சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ராமாராவ், 80,

சமூக ஆர்வலர், நங்கநல்லுார்.

வாங்கப்பட்ட இடம்?கடந்த 50 ஆண்டுகளுக்கு முன், ஹேமலதா என்பவரால் பரங்கிமலை, பட்ரோடு பகுதியில், 'வெப்ஸ் மெமோரியல்' ஆதரவு இல்லம் துவக்கப்பட்டது.அங்கு, 2 வயது முதல் பிளஸ் 2 வரை படிக்கும், 100க்கும் மேற்பட்ட ஆதரவற்ற சிறார்கள் தங்கியுள்ளனர். குத்தகை முடிந்தும் பயன்படுத்தி வந்ததால், 'நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது.தற்போது, 10 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இல்ல நிர்வாகம் தரப்பில், 'அந்த இடம் விலை கொடுத்து வாங்கப்பட்டது; அதற்கான ஆவணங்கள் உள்ளன. அவற்றை, வருவாய் துறையில் சமர்ப்பிப்போம்' என தெரிவித்துள்ளனர்.வாசகர் கருத்து (1)

  • Vinayagam - Bangalore ,இந்தியா

    நிலத்தை 50 வருஷமாக கவனமாக பார்த்து கொன்டு இருக்கும் அதிகாரிகளுக்கு அபராதம் கொடுத்தால் தான் மற்ற வர போகிற அதிகாரிகள் பயந்து பொருப்பாக வேலை செய்வார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement