Load Image
Advertisement

'டவுட்' தனபாலு

தமிழக காங்., தலைவர் அழகிரி: மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலத்தில், வாங்கிய கடனை விட அதிகமாக, தற்போதைய பா.ஜ., அரசு வாங்கி உள்ளது. மத்திய அரசுக்கு கடன் வாங்கும் உரிமை இருக்கிறது என்றால், தமிழக அரசுக்கும் கடன் வாங்குவதற்கு உரிமை இருக்கிறது.

டவுட் தனபாலு: கடன் வாங்குறதுல கூட உரிமை கொண்டாடணுமா...? இப்படி போட்டி போட்டு கடனை வாங்கி குவிச்சா, அதன் வட்டி சுமை, அரசு கஜானாவை தானே பதம் பார்க்கும்... ஒருவேளை, 'தமிழகத்துல நாங்க ஆட்சிக்கு வரும் வாய்ப்பு இருந்தா தானே, அதை பற்றி கவலைப்படணும்'னு நினைச்சுட்டீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!



தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலர் நல்லசாமி: தமிழகத்திற்கான நீரை, கர்நாடகா அணைகளில் இனி சேமிக்க கூடாது; மேட்டூர் அணையில் தான் சேமிக்க வேண்டும். இதுகுறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசு முறையிட வேண்டும். அரசு, இதை செய்யா விட்டால், பாசன பயனாளிகளான நாங்கள் முறையிடுவோம். இப்பிரச்னை குறித்து விவாதிக்க, அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு விரைந்து கூட்ட வேண்டும்.

டவுட் தனபாலு: கர்நாடகாவுல, ஆன்னா, ஊன்னா அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டிடுறாங்க... அந்த மாநில தலைவர்களும், ஒற்றுமையா இருந்து அரசுக்கு ஆமாம் சாமி போடுறாங்க... நம்ம ஊருல, உழக்குல கிழக்கு மேற்கு பார்த்த கதையா, ஆளுக்கொரு பக்கமா முட்டிக்கிட்டு நிக்கிறாங்க... அதனால, அனைத்து கட்சி கூட்டம் நடத்தினாலும் பலன் கிடைக்குமா என்பது, 'டவுட்' தான்!



அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி: கவர்னர் மாளிகை முன், பெட்ரோல் குண்டு வீசிய நபர் குறித்து, வீடியோ வெளியிட்டு பேட்டி கொடுத்த போலீஸ் உயர் அதிகாரி, பெரம்பலுாரில் ஆளுங் கட்சியினர் நடத்திய வெறியாட்டம் குறித்து, வீடியோ வெளியிட தயாரா?

டவுட் தனபாலு: அதெப்படி வெளியிடுவாங்க... நடிகர் வடிவேலு காமெடி மாதிரி, 'பெரம்பலுாரா, அது எங்க இருக்கு... துாத்துக்குடி பக்கமா, கோவில்பட்டி பக்கமா'ன்னு கூட கேட்டாலும் கேட்பாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!





வாசகர் கருத்து (2)

  • M Ramachandran - Chennai,இந்தியா

    இந்த அல்ப்பம் பின்னத்துவதை பெரிதாகா யாருமெ எடுத்து கொள்வதில்லை

  • KUMAR. S - GUJARAT ,இந்தியா

    அழகிரி அண்ணா ..உங்களுக்கு எப்போ ரிடயர்மென்ட் ??

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement