Load Image
Advertisement

அறிவியல் ஆயிரம்: நிலவை சுற்றி ஒளி வட்டம் ஏன்

அறிவியல் ஆயிரம்
நிலவை சுற்றி ஒளி வட்டம் ஏன்
வானில் ஏப்போதாவது நிலவை சுற்றி ஒளிவட்டம் தோன்றுவதை பார்த்திருப்போம். இது ஒன்றும் அதிசய நிகழ்வு அல்ல; இயல்பாக தோன்றும் வானியல் நிகழ்வு தான். நிலவு ஒளியானது, வானில் மேல் மண்டலத்திலுள்ள பனி படிகங்கள் மீது படுகிறது. இது கண்ணாடியைப் போல் செயல்பட்டு ஒளியைப் பிரதிபலிக்கின்றன. இதனால் நிலவை சுற்றி வட்டம் உருவாகிறது. அப்போது வெள்ளி அல்லது வானவில்லை போல வண்ணங்களில் இந்த வட்டம் இருக்கும். இதுபோல் சில நேரங்களில் சூரியனைச் சுற்றி ஒளிவட்டம் ஏற்படுவதுண்டு.

தகவல் சுரங்கம்
நீளமான எல்லை
உலகில் நிலப்பகுதியில் நீளமான எல்லையை பகிர்ந்து கொள்ளும் நாடுகள் அமெரிக்கா - கனடா. துாரம் 8890 கி.மீ., 2வது இடத்தில் கஜகஸ்தான் - ரஷ்யா (துாரம் 7544 கி.மீ.), 3, 4வது இடங்களில் அர்ஜென்டினா - சிலி (6691 கி.மீ.,), சீனா - மங்கோலியா (4630 கி.மீ.,) உள்ளன. ஐந்தாவது இடத்தில் இந்தியா - வங்கதேச எல்லை (4142 கி.மீ.,) உள்ளது. இரு நாடுகளுக்கு இடையே குறைந்த துார எல்லை உடைய நாடு ஸ்பெயின் - மொராக்கோ. மத்திய தரைக்கடலில் இரு நாடுகளும் பகிரும் கோமரா தீவு உள்ளது. இதில் 80 மீட்டர் நீள எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement