Load Image
Advertisement

கல்வி மைய தன்னார்வலருக்கு 7 மாதங்களுக்கு பின் ஊதியம் 'தினமலர்' செய்தி எதிரொலி

கோவை:நம் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து, இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்களுக்கான, நிலுவை ஊதியத்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்கள் மத்தியில் உள்ள கற்றல் இடைவெளி போக்க, கடந்தாண்டு 1 லட்சத்து 76 ஆயிரம், இல்லம் தேடி கல்வி மையங்கள் அமைக்கப்பட்டன.

இங்கு மாலை நேர டியூஷன் வகுப்பு, தன்னார்வலர்கள் உதவியோடு எடுக்கப்படுகிறது. இவர்களுக்கு மாதம், 1,000 ரூபாய் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது.

கோடை விடுமுறை சமயங்களிலும் தொடர்ந்து, இம்மையம் செயல்பட்டதோடு, மாணவர் சேர்க்கை பணிகள், இடைநிற்றல் மாணவர்களை கண்டறியும் ஆய்வுப்பணிகளில், தன்னார்வலர்கள் முழுமையாக ஈடுபடுத்தப்பட்டனர்.

ஆனால், இவர்களுக்கு ஏழு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்ற புகார் எழுந்தது.

இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழில், கடந்த 2ம் தேதி செய்தி வெளியானது.

தொடர்ந்து, மாவட்ட வாரியாக பணியில் உள்ள தன்னார்வலர்கள், ஊதிய நிலுவைத்தொகை குறித்த தகவல்கள் திரட்டப்பட்டு, நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்கள் கூறுகையில், 'நடப்பு கல்வியாண்டு துவங்கியதில் இருந்தே, பலமுறை வலியுறுத்தியும், ஊதியம் வழங்கப்படவில்லை. 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியான ஓரிரு நாட்களிலே, ஊதியம் வழங்கப்படுகிறது' என்றனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement