Load Image
Advertisement

'டிஸ்கரேஜ்' செய்யாமல் இருந்தாலே போதும்; பிழைத்து கொள்வோம்!



தமிழகத்தின் முதல் பெண் கார் மெக்கானிக்கான, சென்னை, வளசரவாக்கத்தைச் சேர்ந்த, புஷ்பராணி:

பெண்கள் தேர்ந்தெடுக்க தயங்கும் துறையில் காலுான்றி, 'தமிழகத்தின் முதல் பெண் கார் மெக்கானிக்' என்ற தனித்த அடையாளத்தை பெற்றிருக்கிறேன்.

திருவண்ணாமலை பக்கத்தில், ஈருடையாம்பட்டு தான் என் கிராமம். 10ம் வகுப்புடன், படிப்பு நின்று விட்டது. 16 வயதில், 'டேட்டா என்ட்ரி' வேலை பார்க்க சென்னைக்கு வந்தேன்.

வேலை பார்த்தபடியே, 10ம் வகுப்பில் மீதமிருந்த சப்ஜெக்ட்களை எழுதி தேர்ச்சி பெற்று, அஞ்சல் வழியாக, எம்.ஏ., வரை படித்தேன். டேட்டா என்ட்ரி வேலையில் வருமானம் குறைவு.

அதை விட்டு, கவரிங் ஜுவல்ஸ் சப்ளை செய்யும் வேலை பார்த்து, நிறைய சம்பாதித்தேன். ஊரில் பெற்றோருக்கு உடம்பு சரியில்லாமல் போனதால், ஏகப்பட்ட மருத்துவச் செலவு.

இதனால், என் பிசினஸ் மொத்தமாக முடங்கியது. அதன்பின் ஏற்பட்ட சூழ்நிலை, என்னை மெக்கானிக்காக மாற்றியது.

என் கூடவே இருந்த அக்கா மகன், கார் மெக்கானிக் வேலை கற்றுக் கொண்டிருந்தான். அப்போது, என் சேமிப்பு, நகைகள் என எல்லாவற்றையும் செலவு செய்து, அவனுக்கு சொந்தமாக மெக்கானிக் ஷெட் வைத்துக் கொடுத்தேன்.

அதை துவங்கிய சில மாதத்திலேயே கொரோனா வந்ததால், தொழில் முடங்கி, அக்கா மகன் அதில் இருந்து விலகிப் போயிட்டான்.

அவனுக்காக வைத்த கார் ஷெட்டை என்ன செய்வது என்று தெரியவில்லை. அப்போது, ஒரு வைராக்கியம் வந்து, என்ன ஆனாலும் ஒரு கை பார்த்துடுவோம் என, இந்த தொழிலுக்குள் வந்து விட்டேன். நல்ல அனுபவமுள்ள ஒரு மெக்கானிக்கை வேலைக்கு வைத்தேன்.

முதலாளி என்ற நினைப்பை விட்டுவிட்டு, ஒரு சிஷ்யை போல இருந்து, தொழில் கற்றுக் கொண்டேன்.

அந்த சீனியர் மெக்கானிக், ஒரு காரை சரி செய்து முடித்து, வீட்டுக்கு சென்ற பின், அதே வேலையை திரும்பவும் நான் செய்து பார்ப்பேன்; இது தான், நான் மெக்கானிக் ஆன கதை.

இந்த தொழிலில் முதலில், ஒரு பெண் என்பதாலேயே நிறைய ஏளன பேச்சு, அவமானங்களை சந்தித்தேன். எல்லாவற்றையும் தாண்டி தான் கடந்து வர வேண்டி இருந்தது.

என் குடும்பத்தினர் கூட, 'ஊரு தப்பா பேசும்... மெக்கானிக் வேலை வேணாம்' என்று தான் தடுத்தனர். ஒரு அக்கா தவிர, மற்ற யாரும் எனக்கு ஆதரவு தரவில்லை.

தற்போது, தனி மனுஷியாக இருப்பதால், சில சமயம் அதிகாலை, 2:00 மணி வரை கூட வேலை பார்ப்பேன். இந்த சமூகம், என்னை போல தனித்து இயங்கும் பெண்களுக்கு ஆதரவாக இல்லாமல் போனாலும் பரவாயில்லை.

'டிஸ்கரேஜ்' செய்யாமல் இருந்தாலே போதும்; நாங்கள் பிழைத்துக் கொள்வோம்!



வாசகர் கருத்து (1)

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    தப்பித்தவறி கூட ......

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement