Load Image
Advertisement

தினமலர் செய்தி எதிரொலி: நீச்சல் குளத்தில் உதயநிதி ஆய்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி 5 கோடியில் கட்டப்பட்ட சர்வதேச நீச்சல் குளம் செயல்படாமல் கிடப்பது குறித்து தினமலர் செய்தி வெளியிட்டு இருந்தது. நீச்சல் குளத்தை அமைச்சர் உதயநிதி, தங்கம் தென்னரசு நேரில் ஆய்வு செய்தனர்.

பின்னர் உதயநிதி கூறியதாவது: தொழில்நுட்ப ரீதியாக குளறுபடிகள் உள்ளன. அதனை சரி செய்ய பத்து லட்ச ரூபாய் ஒதுக்கி விரைவில் நீச்சல் குளம் செயல்பாட்டுக்கு வரும்.நவம்பர் 30ம் தேதிக்குள் திருநெல்வேலி ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட் பணிகள் நிறைவு பெறும். வரும் டிசம்பரில் பஸ் ஸ்டாண்டை முதல்வர் காணொளி மூலம் திறந்து வைப்பார். தமிழகத்தில் ஆட்சியை கலைப்பது குறித்து மத்திய அரசு யோசித்து பார்க்கட்டும் . இவ்வாறு உதயநிதி கூறினார்.



வாசகர் கருத்து (3)

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    ஐந்து கோடியில் வெறும் ஒரு நீச்சல்குளமா? பெரிய கொள்ளை நடந்திருக்கிறது. அந்த பணத்தில் ஒரு ஏரியை நிறுவி, ஊர் மக்களுக்கே குளிக்க ஏற்பாடு செய்திருக்கலாம்? இதில் ஆய்வு வேற...

  • mrsethuraman - Bangalore,இந்தியா

    பிரச்னையை தீர்க்க உடனே க(கு)ளத்தில் இறங்கியதற்கு நன்றி .

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    இதுபோல் ஒவ்வொரு குறைபாடும் தினமலர் பத்திரிகை வாயிலாத்தான் அரசுக்கு தெரியவரும் போலும். அரசு இயந்திரங்கள் .மேலிடத்தை துதிபாடுவதிலேயே காலம் கடத்துகின்றன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement