Load Image
Advertisement

கவலைப்படாதே சகோதரி, கைகொடுப்பார் கலாவதி


இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயான சம்பாதிக்கும் பெண் ஒருவர் வழக்கமாக என்ன செய்வார்.
பிள்ளைகளின் நிகழ்கால தேவைக்காகவும்,எதிர்கால பாதுகாப்புக்காகவும் பணம் சேர்ப்பார், கொஞ்சம் கூடுதலாக வருமானம் வந்தால் நகையாக சேர்ப்பார் இன்னும் கொஞ்சம் கூடுதலாக சம்பாதித்தால் வீடு,மனையாக வாங்கிப்போடுவார்.

இதுதான் இயற்கை, உலக இயல்பும் கூட .
ஆனால் மதுரையைச் சேர்ந்த ஆடிட்டர் கலாவதி என்பவர் தனது சம்பாத்தியத்தை ,ஏழை எளிய மாணவியரை கல்லுாரியில் படிக்கவைப்பதற்காக செலவிட்டு வருகிறார்.
அரசுப்பள்ளியில் படிக்கும் ஏழை மாணவியர் வாழ்க்கை மிகவும் சவாலானது, அவர்களில் பெரும்பாலனவர்களின் அப்பாக்கள் டாஸ்மாக் புண்ணியத்தில் இறந்து போயிருப்பர்,அம்மாக்கள் நுாறு நாள் திட்டத்தில் வேலை பார்த்து கிடைக்கும் கூலியில்தான் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருப்பர்.
இது போன்ற பின்னனியில்தான் பல மாணவியர் தங்கள் கல்வியை தொடர்கின்றனர்.கல்வி ஒன்றுதான் தன்னையும் தன் குடும்பத்தையும் கரை சேர்க்கும் என்ற ஒரே நம்பிக்கையுடன் தட்டுத்தடுமாறி பிளஸ் டூ வரை வந்துவிடுகின்றனர். எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும் கல்லுாரியில் காலடி எடுத்துவைக்க வேண்டிய கால கட்டத்தில்தான் அவர்களுக்கு பல சோதனைகள் காத்திருக்கும்.
அதுவரை சில ஆயிரங்களில் இருந்து கல்விச்செலவு பல ஆயிரமாக எகிறும்,படிச்ச வரை போதும் நாங்க கட்டிக்கிறோம் என்று திருமணத்துாண்டில் போட்டபடி சொந்தங்கள் வலம்வரும்,மகளை வேலைக்கு அனுப்பினால் குடும்ப சுமை குறையுமே என நினைக்குமளவிற்கு வறுமை விரட்டும்..இவ்வளவையும் தாண்டி நல்ல மார்க் வாங்கியிருக்கிற நீ என்ன படிக்க நினைக்கிறீயோ? அதைப்படிம்மா ராசாத்தி நான் பார்த்துக்கிறேன் என்று சொல்வதற்குதான் ஆட்கள் தேவை.
அந்த மாணவியரின் வழியில் வந்தவள் என்ற வகையிலும் அவர்களின் வலியை முழுமையாக அறிந்தவள் என்ற முறையிலும் அவர்களுக்கு உதவும் சகோதரியாக ஏன் நாமே இருக்கக்கூடாது என முடிவு செய்தேன்,.
மேலும் ஒரு பெண்ணை படிக்கவைத்தால் அந்த குடும்பத்தின் சூழலே மாறிவிடும் என்பதால் மாணவியை மட்டுமே படிக்கவைப்பது ,அந்த பெண்ணும் அரசுப்பள்ளி மாணவியாக இருக்கவேண்டும் , நல்ல மதிப்பெண் பெற்றிருக்கவேண்டும், இதற்காக ஒரு பைசா கூட வெளியில் இருந்து நன்கொடை வாங்கக்கூடாது முழுக்க முழுக்க எனது பங்களிப்பாக மட்டுமே இருக்கவேண்டும் என்றெல்லாம் முடிவு செய்து களத்தில் இறங்கினேன்.
நாம் உதவாவிட்டால் அந்தப் மாணவி படிப்பை கைவிட்டுவிடுவாள் என்ற நிலையில் உள்ள மாணவியாகப் பார்த்து தேர்வு செய்தேன், ஒரு நாள் அவர்களை ஒரு இடத்திற்கு குடும்பத்துடன் வரவழைத்து அறுசுவை உணவு வழங்கி படிப்பு கட்டணத்தையும் வழங்கி அனுப்பிவைத்தேன்.
அன்று நான் அடைந்த ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை,மாணவியரின் பெற்றோர் எனது கைகளை பிடித்துக் கொண்டு விட்ட ஆனந்த கண்ணீருக்கும் அளவே இல்லை.இது அத்தனையும் சாத்தியமாவதற்கு என் கணவர் ஜெய்பாலாஜியின் அன்பும் ஆதரவும்தான் முக்கய காரணம்.
முன்னிலும் கடுமையாக உழைத்து வருமானத்தை பெறவேண்டும் அந்த வருமானத்தில் இன்னும் நிறைய பேரை படிக்க வைக்க வேண்டும் இதுதான் என் வாழ்வின் லட்சியம் ,இதற்காக 'பிரபஞ்சா' என்ற அறக்கட்டளையைத் துவக்கியுள்ளேன்,இந்த அறக்கட்டளை சம்பந்தப்பட்ட மாணவியருக்கு தொடர்ந்து வேண்டிய சேவைகள் செய்யும்.என்று கூறி முடித்தார் ஆடிட்டர் கலாவதி
அவரது முயற்சிகள் வெற்றி பெறட்டும் அவருக்கான மெயில் முகவரி: prapanjafoundations09@gmail.com
-எல்.முருகராஜ்வாசகர் கருத்து (4)

  • Dr.K.Ravindran - KANYAKUMARI,இந்தியா

    Madam,it was so nice of you for the good heart that saw the poverty stricken girls rising up .Me too,when I was the administrative head of Rajas Dental College,Kavalkinaru at the intersect of Kanniyakumari-Tirunelveli, I have been a bridge and a helping hand to mitigate the crucial situations of many of the Girls in this prestigious Dental College to share my salary for their upcoming, that gave me the happiness.-Dr.K.Ravindran MBBS DCH,Retd JD Medl Services to Govt,Nagercoil.

  • Narasimhan P - Tirupattur,இந்தியா

    "பெரும்பாலனவர்களின் அப்பாக்கள் டாஸ்மாக் புண்ணியத்தில் இறந்து போயிருப்பர்,..." உண் வன்மத்துக்கு அளவே இல்லையா?

  • Joseph Agustine - Tirunelveli,இந்தியா

    வாழ்த்துக்கள் சகோதரி

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement