Load Image
Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

மா.கம்யூ., மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை: தமிழகம் முழுதும் அரசியல் செல்வாக்கு, அதிகாரம், பணபலம் படைத்தவர்கள் சட்ட விரோதமாக அரசு நிலங்களை அபகரித்திருந்தால், அந்த நிலங்களை அரசு மீட்டெடுக்க வேண்டும். நில மோசடி, முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மட்டுமின்றி, அவர்களுக்கு துணை புரிந்த அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவு செய்து, கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

'ஆளுங்கட்சியினர், கூட்டணி கட்சியினரா இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கணும்'னு ஒரு வரி சேர்த்து சொல்லியிருக்கலாமே!


தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: இது வரை, ஆங்கிலத்தில் யு.பி.ஏ., என, அழைக்கப்பட்ட கூட்டணியை, தமிழில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி, ஐ.மு.கூ., என சொல்லிக் கொண்டிருந்தவர்கள், 'இண்டியா' என்று பெயர் சூட்டப்பட்ட இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணியை, இ.தே.வ.உ.கூ., என்றல்லவா தமிழில் அழைக்க வேண்டும். அதை விடுத்து மலிவான அரசியலுக்காக, தமிழை புறக்கணித்து, இண்டியா கூட்டணி என்று சொல்லிக் கொள்வது, மக்களை ஏமாற்றவா அல்லது தாங்கள் புத்திசாலிகள் என்ற நினைப்பிலா?
அவங்க கதை தெரிந்தது தானே... நீங்களாவது, 'இண்டியா' கூட்டணி என்று இனி அழைக்காமல், இ.தே.வ.உ.கூ., என, இன்று முதல் அழைக்கலாமே!

அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை: தமிழகம் முழுதும் ஆம்னி பஸ்களின் கட்டணம், விமான கட்டணம் அளவுக்கு உயர்வதை, அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது, நடுத்தர மற்றும் விளிம்பு நிலை மக்களை, மன வேதனை அடைய செய்கிறது. முதல்வர், 2 லட்சம் ரூபாய் கொடுத்து, தனி ரயில் பெட்டியில் பயணம் செய்யலாம்; ஆனால், சாமானியர்களின் நிலையை எண்ணி பாருங்கள். உடனடியாக அரசு கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆம்னி பஸ் ஓனர்கள் எல்லா, 'கவனிப்பு'களையும் முடிச்ச பிறகு தானே, பயணியர் தலையில் சுமையை ஏத்துறாங்க... அதெப்படி அரசு நடவடிக்கை எடுக்கும்?

அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை: பரந்துார் விமான நிலைய திட்டத்திற்கு எதிராக, அறவழியில் போராட்டம் நடத்திய கிராம மக்கள் மீது, காவல் துறை வழக்கு பதிவு செய்திருப்பது கண்டனத்துக்குரியது. அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை, உடனடியாக அரசு திரும்ப பெற வேண்டும். விவசாயிகள், பொதுமக்கள் விரும்பாத எந்த ஒரு திட்டத்தையும் தமிழகத்திற்கு கொண்டு வரக்கூடாது.

விவசாயிகள் போராட்டம் நியாயம் தான்... ஆனால், வளர்ச்சி திட்டங்கள் வேணும்னா அதுக்கு தேவையான நிலத்தை கொடுத்து தானே ஆகணும்!



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement