Load Image
Advertisement

பாதியில் நிறுத்திய பயணியர் நிழற்குடை பணி துவக்கம்

பாண்டூர்:திருவள்ளூர்-திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில், பாண்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட கனகவல்லிபுரம் கிராமத்தில் வசிப்போர், திருவள்ளூர் உள்ளிட்ட வெளியூர் செல்ல, தேசிய நெடுஞ்சாலை அருகில் அமைந்துள்ள பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இங்கு நிழற்குடை எதுவும் இல்லாததால், கிராமவாசிகள் வெட்டவெளியிலும், அருகில் உள்ள மரத்தடியிலும் பேருந்துக்காக காத்திருந்தனர். கிராமவாசிகளின் கோரிக்கை ஏற்று, மாவட்ட கவுன்சிலர் மேம்பாட்டு நிதியில், கடந்த ஆண்டு, 6 லட்சம் ரூபாய் மதிப்பில், பயணியர் நிழற்குடை கட்டும் பணி துவங்கியது.

ஆனால், பணி நிறைவடையாமல், கிடப்பில் போடப்பட்டது. நிழற்குடை கூரையை தாங்கும், இரும்பு குழாய்கள், தரையை தொடாமல் அந்தரத்தில் இருந்தது. மேலும், தரை தளம் போடாமலும், படிக்கட்டு அமைக்கும் பணி உள்ளிட்ட அனைத்து பணிகளும் கிடப்பில் போடப்பட்டது.

இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது.

இதையடுத்து, மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி நிறுத்தப்பட்ட பயணியர் நிழற்குடை பணி தற்போது நடைபெற்று வருகிறது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement