நெகிழிக் (பிளாஸ்டிக்) கழிவுகளில் இருந்து சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் ஹைட்ரஜன் வாயுவைத் தயாரிக்கும் முறையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஹைட்ரஜன் வாயு மிகச் சிறந்த எரிபொருள்.
புதைபடிவ எரிபொருட்களை விட அதிகளவு ஆற்றலைத் தரவல்லது. மின்சாரம் தயாரிக்கவும், வாகனங்களை இயக்கவும் இைத பயன்படுத்த முடியும். தற்போது நமக்குத் தேவையான 95 சதவீத ஹைட்ரஜன் 'ஸ்டீம் - மீத்தேன்' முறையில் தான் தயாரிக்கப்படுகிறது. இந்த முறையில் 1 டன் ஹைட்ரஜனை உருவாக்கும்போது, 11 டன் கரியமில வாயு வெளியாகிறது. இது சுற்றுச்சூழலுக்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தல் இல்லாமல் ஹைட்ரஜனை உருவாக்கும் வழிமுறையைக் கண்டறிய விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில், அமெரிக்காவின் ரைஸ் பல்கலை நெகிழிக் கழிவுகளில் இருந்து ஹைட்ரஜன் எடுக்கும் புதுமுறையைக் கண்டறிந்துள்ளது.
இந்த முறையில் நெகிழிக் கழிவுகளைச் சுத்தம் செய்ய வேண்டியதில்லை. அதை நேரடியாக 2826 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்திற்குச் சூடாக்குவர். இந்தக் கடும் வெப்பத்தில் நெகிழியில் உள்ள ஹைட்ரஜன் முழுதும் ஆவியாகிவிடும். அதைத் தனியாகச் சேகரித்து விடுவர். கிராப்பின் மட்டும் மிஞ்சி இருக்கும். இது மின்னணுக் கருவிகளில் பயன்படும் ஒரு முக்கியப் பொருள்.
இந்த முறையில் ஹைட்ரஜன் தயாரித்தால் நெகிழியால் உருவாகும் சுற்றுச்சூழல் கேட்டைத் தடுக்க முடியும். விரைவில் இம்முறை மேம்படுத்தப்பட்டு பயன்பாட்டிற்கு வர உள்ளது.
2826C வரை சூடாக்குவதற்கு என்ன எரிபொருள் தேவை என்பதைப் பற்றியும் சொல்லுங்க. ஹைட்ரஜன் பெரும்பாலும் வெறும் தன்னிலிருந்து எலெக்ட்ரோலிஸிஸ் மூலம் தயாரிக்க படுகிறது. 100 கலோரி எரிபொருள் செலவழித்தால், 37 கலோரிக்கு சமமான மின்சாரம் கொடுக்கவல்லது ஹைட்ரஜன். அதை சேமித்து வைப்பதும், ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு க்ண்டுசெல்வதும் இன்றுவரை மிக சிரமான விஷயமாக இருந்து வருகிறது. சூரிய ஒளி மூலம் கிடைக்கும் மின்சாரத்தை பயன்படுத்தி தயாரிக்கும் ஹைட்ரஜன் இதுவரை சிறப்பான முறை என்று கருதப்படும் நிலையில், அந்த முறையிலேயே அதிக அளவு மின்சாரம் வீணாகும் என்ற உண்மை நிறைய பேருக்கு தெரிவதில்லை. இப்படிப்பட்ட நிலையில், "நெகிழிக்" கழிவுகள் மூலம் என்ன நன்மை நிகழ்ந்துவிடப்போகிறது?