Load Image
Advertisement

ஆலந்துாரில் மின் கம்பங்களை அகற்றி வடிகால் இணைப்பு பணி விறுவிறு

ஆலந்துார் மண்டலம், ஆலந்துார், ஆதம்பாக்கம், நங்கநல்லுார் உள்ளிட்ட பகுதிகளில், 40.83 கோடி ரூபாய் மதிப்பில், 67 சாலைகளில், ஒப்பந்ததாரர் வாயிலாக மழைநீர் வடிகால் அமைக்கப்படுகிறது.

இப்பணியின்போது மரம், மின்கம்பம் இருந்தால், அவற்றை வேறு இடத்திற்கு மாற்றி, வடிகால் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, ஒப்பந்தத்தில் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

ஆனால், பணிக்கு இடையூறாக மரங்கள், மின்கம்பங்களை அகற்றாமல் இடைவெளி விட்டு வடிகால் அமைக்கப்பட்டது.

இதனால், மழைக்காலத்தில் நீரோட்டம் தடைபட்டு, குடியிருப்புகளில் வெள்ளம் சூழம் நிலை உள்ளதாக, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக, வடிகால் இணைப்பிற்கு இடையூறாக உள்ள மின் கம்பங்கள், ஜே.சி.பி., இயந்திரம் உதவியுடன் பிடுங்கி அருகில் நடப்பட்டு, விடுபட்ட இடங்களில் வடிகால் இணைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement