பாலியல் தொழில் இருவர் சிக்கினர்
சென்னை, வேளச்சேரி, விஜயநகரில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக, விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஆய்வு செய்தனர்.
இதில், திருநெல்வேலியைச் சேர்ந்த சிமியோன் ஜார்ஜ், 23, திருப்போரூரைச் சேர்ந்த காளிதாஸ், 27, ஆகியோர் இரண்டு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது. நேற்று இருவரையும் கைது செய்த போலீசார், பெண்களை மீட்டு அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!