செய்யூர்:செங்கல்பட்டு மாவட்டம், படாளம் சர்க்கரை ஆலை அருகில், செய்யூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பள்ளம் ஏற்பட்டது.
இந்த பள்ளம் தனியார் கேபிள் நிறுவனம் கேபிள் பதிப்பதற்காக தோண்டப்பட்டது. அதை சரியாக மூடாமல் தனியார் நிறுவனம் விட்டு விட்டது. இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியிடப் பட்டது. இதன் எதிரொலியாக, நேற்று முன்தினம் காலை நெடுஞ்சாலைத் துறையினர் பள்ளத்தை சீரமைத்து சரிசெய்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!