வேன் மோதி தொழிலாளி பலி
காஞ்சிபுரம்:பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் தமுமாஞ்சி, 40. காஞ்சிபுரம் அடுத்த, நீர்வள்ளூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், நேற்று மாலை, வேலை முடிந்து அவர் தங்கி இருக்கும் இடத்திற்கு சாலையில் நடந்து சென்று வந்துள்ளார்.
அப்போது பின்னால் வந்த வேன், அவர் மீது மோதியது. இந்த விபத்தில் அவர் பலத்த காயம் அடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மருத்துமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர்.
அதற்குள் சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். இது குறித்து, காஞ்சி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவர் உடலை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!