Load Image
Advertisement

'ஆன்மிகத்தை அரசியலாக்கலாமா?'

'இவர் எப்படி திடீரென ஆன்மிகவாதியாக மாறினார்...' என பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத்யாதவை பார்த்து ஆச்சரியப்படுகின்றனர், சக அரசியல்வாதிகள்.

இவர், பீஹார் முதல்வராக இருந்தபோது, கால்நடைகளுக்கு தீவனம் வாங்கியதில் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில், அவருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது, ஜாமினில் வெளியில் வந்துள்ளார்.

சமீப காலமாக, தன் மனைவியும், பீஹார் முன்னாள் முதல்வருமான ரப்ரி தேவியுடன் கோவில் கோவிலாக சென்று தரிசனம் செய்து வருகிறார். நாடு முழுதும் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களுக்கு சென்று, மனம் உருக வேண்டி வருகிறார்.

இதைப் பார்த்த எதிர்க்கட்சியினர், 'கோவிலுக்கு செல்வதில் அவ்வளவு ஆர்வம் காட்டாதவர், இப்போது திடீரென கோவில்களை வலம் வருவது ஏன்...' என, கேள்வி எழுப்பினர்.

சமீபத்தில் காங்., முன்னாள் தலைவர் ராகுலுடன் சேர்ந்து, லாலு பிரசாத் யாதவ், ஆட்டுக்கறி சமைக்கும் வீடியோ வெளியானது. வட மாநிலங்களில் புனிதமாக கருதப்படும் ஷிரவண மாதத்தில், லாலு அசைவம் சமைத்தது சர்ச்சையானது.

'இதை சரி செய்யவே, கோவிலுக்கு செல்வதையும், அது தொடர்பான வீடியோவையும், அவரது கட்சியினர் வெளியிடுகின்றனர்...' என, பா.ஜ.,வினர் கூறுகின்றனர்.

லாலு பிரசாத் விசுவாசிகளோ, 'லாலு எப்போதுமே தீவிர சிவ பக்தர். அது எல்லாருக்குமே தெரியும். ஆன்மிக விஷயத்தை தேவையில்லாமல் அரசியலாக்க வேண்டாம்...' என்கின்றனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement