ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம், அம்மனேரி ஊராட்சிக்கு உட்பட்டது, கொண்டாபுரம் கிராமம். இந்த கிராமத்தில், 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இவர்களின் தேவைக்காக, கிராமத்தின் வடக்கு பகுதியில், ரேஷன் கடை அமைந்துள்ளது. பொருட்களை இருப்பு வைக்க தேவையான இடத்துடன் அமைந்துள்ள இந்த கடையில், பொருட்களை வாங்க வருபவர்கள் காத்திருக்க போதிய இடவசதி இல்லை.
இதனால், அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் உள்ளிட்டவற்றை வாங்கி செல்ல வரும் பகுதிவாசிகள், வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
எனவே, ரேஷன் கடைக்கு முன்புறம், நிழலுக்காக பந்தல் அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!