அறிவியல் ஆயிரம்:பெரிய அணுமின் நிலையம்
அறிவியல் ஆயிரம்
பெரிய அணுமின் நிலையம்
ஜப்பானில் உள்ள காஷிவாஜகி - காரிவா அணுமின் நிலையம் தான் உலகின் பெரிய அணுமின் நிலையம். இது 1985 செப். 18ல் உருவாக்கப்பட்டது. இதில் ஏழு அணு உலைகள் உள்ளன. மொத்தம் 7965 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. டோக்கியோ மின்சார நிறுவனம் நிர்வகிக்கிறது. இப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் தென்கொரியாவின் கோரி அணுமின் நிலையம் (7489 மெகாவாட், ), ஹானுல் அணுமின் நிலையம் (7268 மெகாவாட்), கனடாவில் புரூஸ் அணுமின் நிலையம் (6610 மெகாவாட்), சீனாவின் ஹாங்யான்கி அணுமின் நிலையம் (6366 மெகாவாட்) உள்ளன.
தகவல் சுரங்கம்
சர்வதேச சம ஊதிய தினம்
சம வேலைக்கான ஊதியம் அனைவருக்கும் சம அளவில் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ஐ.நா., சார்பில் செப். 18ல் சர்வதேச சம ஊதிய தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் சுகாதார துறையில் பணியாற்றும் பெண்களுக்கு, ஆண்களை விட 24 சதவீதம் குறைந்த ஊதியம் வழங்கப்படுகிறது. இது போல பல்வேறு துறைகளிலும் ஒரே வேலைக்கு, ஆண்களை விட பெண்களுக்கு குறைந்த ஊதியம் அளிக்கப்படுகிறது. இதனால் ஆண் - பெண் இடையே ஏற்றத்தாழ்வு உருவாகிறது. இந்த இன பாகுபாட்டை நீக்கவும், சம ஊதியம் அளிக்கவும் இத்தினம் வலியுறுத்துகிறது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!