மழைநீர் கால்வாய் சேதம் சீரமைக்கும் பணி துவக்கம்
வாலாஜாபாத்:வாலாஜாபாத் - ஒரகடம் சாலையில், வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தின் முகப்பில், 2020ல் மழைநீர் வடிகால்வாய் வசதியை, நெடுஞ்சாலைத் துறையினர் ஏற்படுத்திகொடுத்தனர்.
இந்த மழைநீர் கால்வாய் கட்டுமான பணியில், தரம் இல்லாததால் மழைநீர் கால்வாய் மேற்புற கான்கிரீ்ட் சிமென்ட் தளம் ஆங்காங்கே உடைந்து, கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டிருக்கிறது. மேலும், நடந்து செல்லும் பாதசாரிகளின் கால்களில் காயம் ஏற்படும் அபாயம் உள்ளது என, நம்நாளிதழில்படத்துடன் செய்தி வெளியாகிஇருந்தது.
இந்த
செய்தியை தொடர்ந்து, வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு
செல்லும் சாலையில், சிமென்ட் கான்கிரீட் மேல் தளத்தை ஜே.சி.பி., வாகனத்தில் அகற்றி விட்டு, புதிய கான்கிரீட் தரை தளம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, நெடுஞ்சாலைத் துறையினர்
தெரிவித்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!