Load Image
Advertisement

'இண்டியா'வை முதலில் காப்பாற்றுங்கள்!

என். தொல்காப்பியன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: டில்லியில், 'ஜி - 20' மாநாட்டில், ஜனாதிபதி அளித்த விருந்தில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு விடுக்காத நிலையில், திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றது, பெரிய அளவில் சர்ச்சையை உண்டுபண்ணியுள்ளது.உதயநிதி சனாதனம் பற்றிப் பேசியதற்கு, மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், ராகுல் போன்ற, 'இண்டியா' கூட்டணித் தலைவர்கள் ஆதரவு அளிக்காமல் ஒதுங்கி கொண்டது, தி.மு.க.,தலைமைக்கு சொல்ல முடியாத வேதனையை உண்டு பண்ணி விட்டது என்றே சொல்லலாம்.இந்தியா என்று இருப்பதை பாரதம் என்று மாற்றுவதை, சிதம்பரம் போன்ற மூத்த காங்கிரஸ் தலைவர்கள் எதிர்த்து விமர்சனம் செய்யாதது, தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு மனவருத்தம் தந்திருக்கும்.
அதனால் தான், தன் எதிர்ப்பை, 'இண்டியா' கூட்டணி தலைவர்களுக்கு தெரிவிக்க, ஜனாதிபதி அளித்த விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். தன் மனவருத்தத்தை, லோக்சபா

தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு தொகுதி பங்கீடு செய்யும் போது, நிச்சயம் வெளிப்படுத்துவார் ஸ்டாலின். தேர்தலுக்கு முன்பே, இப்படி முட்டல், மோதலில் ஈடுபடும், 'இண்டியா' கூட்டணி தலைவர்களால், பா.ஜ., ஆட்சி மீண்டும் வருவதை எப்படி தடுத்து நிறுத்த முடியும்?
'ஜி - 20' மாநாட்டை மிகச் சிறப்பாக நடத்தியதன் வாயிலாக, பிரதமர் மோடியின் செல்வாக்கு பல மடங்கு அதிகரித்து விட்டது; இது, நடைபெறப் போகும் லோக்சபா தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும்.
இந்தியா என்ற பெயரை பாரதம் என்று மாற்றம் செய்வதிலும், சனாதனம் பற்றிய கொள்கையிலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. ஆனால், இண்டியா கூட்டணியில் வடமாநில தலைவர்களுக்கும், தென்மாநில தலைவர்களுக்கும் இடையே கருத்து மோதல்கள் இப்போதே உருவாகி விட்டன.
ஒரு மாநிலத்தில் கூட்டணியாக செயல்படுபவர்கள், இன்னொரு மாநிலத்தில் எதிரணியாக செயல்படும் அதிசயத்தை, வரும் லோக்சபா தேர்தலில் பார்க்க முடியும். இந்த பிரகஸ்பதிகள் ஒன்று கூடி இந்தியாவையும் காப்பாற்ற முடியாது; இண்டியா என்ற பெயரில் வைத்திருக்கும் கூட்டணியையும் காப்பாற்ற முடியாது.
ஆட்சிக்கு யார் வர வேண்டும், யார் வரக்கூடாது என்ற விஷயத்தில், இந்திய வாக்காளர்கள் ரொம்ப தெளிவாகவே இருக்கின்றனர்.


இறைவன் அருளிய கொடை... மோடி !


பங்கஜம் கோபால ஸ்வாமி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நம் -பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை நேசிப்பவர்களாக, அவரின் ஆதரவாளர்களாக, கோடிக்கணக்கானவர்கள் திகழ்வதற்கான, அரசியல் கலப்படமற்ற சில காரணங்கள்...

* இவரை என்றாவது, கலைந்த தலை, உடை, மற்றும் குழப்பமான மனநிலையில் யாராவது கண்டதுண்டா?

*நம் பிரதமர், ஒரு காவி அங்கி அணிந்த துறவியையும், ராணுவ உடை தரித்த சிப்பாயின் மிடுக்கையும், சாதாரண உடையில் உள்ள ஒரு தெய்வீக இளவரசரையும் ஒத்திருப்பது தான்

*எந்த உலகத் தலைவர்கள் மத்தியிலும், மோடியின் ஆளுமை மேலோங்கி காணப்படும்

*நாட்டின் பிரதமராக மிக உயர்ந்த பதவியில் இருந்த போதும், தன் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு போதும் ஆதாயம் செய்ததில்லை; அவர்களை ஊக்குவித்ததும் இல்லை. அவர்கள், வெகு சாதாரண வாழ்க்கையே வாழ்கின்றனர்

*மேலும் அவர், ஒருபோதும் தன் சொந்த நலனுக்காக, விடுமுறையோ, ஓய்வோ, எடுத்ததே இல்லை


*எப்போது பேச வேண்டும், எப்போது மவுனமாக இருக்க வேண்டும் என்பது அவருக்கு கைவந்த கலை

* இந்த, 73 வயதிலும் ஓய்வின்றி ஓடி ஓடி உழைத்தாலும், ஒருபோதும் களைப்பாகவோ, அசதியாகவோ, காணப்பட்டதே இல்லை. மேலும் அவரிடம், மிகச்சிறந்த நகைச்சுவை உணர்வும் அமைந்திருப்பது, அற்புதம் கத்தியைப் போன்ற கூர்மையான பேச்சு, கச்சிதமான தெளிவு, திறன் மிக்க வார்த்தை பிரயோகம் போன்றவை மோடிஜியின் தனி முத்திரை

*முடிவெடுக்கும் திறன், புத்திசாலித்தனம், சரியான நேரத்தில், சரியான முடிவை அறிவித்து செயல்படுத்துதல், முழு ஈடுபாடு போன்றவை, அவரிடம் இருக்கும் தனித்தன்மைகளாகும்உலகின் எந்த கோடியில் தேடினாலும், கிடைப்பதற்கு அரிதான பொக்கிஷம் தான், கோடியில் ஒருவரான மோடி; இவர், நம் பாரத தேசத்திற்கு, இறைவன் அருளிய கொடை!கொசுவர்த்தி சுருளின் மைய கருத்து!


என்.இப்ராஹிம் பாதுஷா, நாகூர், நாகை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அமைச்சர் உதயநிதி, 'எக்ஸ்' தளத்தில் கொசுவர்த்தி சுருளை படமாக போட்டு, தமிழக மக்களிடம் எதையோ சொல்ல முயன்றுள்ளார். அந்த சுருளானது, சனாதனம் பேசும் ஆன்மிக குருமார்களை குறிப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால், அந்த கொசுவர்த்தி சுருளின் மைய கருத்தை நாம் இப்படியும் கொள்ளலாம்...பழைய படங்களில், கதாநாயகனின் கடந்த காலத்தை சொல்லும், 'பிளாஷ்பேக்' காட்சிக்கு இந்த கொசுவர்த்தி சுருளை காட்டுவர். அதன்படி,
உதயநிதி வெளியிட்ட கொசுவர்த்தி சுருளின் வாயிலாக, தி.மு.க., கடந்து வந்த பாதையை பின்னோக்கி பார்த்தால், கருணாநிதி, சனாதனம் பேசிய பா.ஜ., தலைவர்களுடன் கொஞ்சி குலாவியது தெரியும்.
அரசியலுக்காக மட்டுமே,கருணாநிதி அவ்வப்போது சனாதன விமர்சனத்தை உதிர்த்தார் என்பதை, அப்போது
சிறுபிள்ளையான உதயநிதி அறிந்திருக்க மாட்டார்...அ.தி.மு.க.,வில் டீக்கடை வைத்தவர், அடிமட்ட தொண்டன் போன்றோர்
கூட முதல்வராகி, வரலாற்று சாதனை புரிந்துள்ளனர். உதயநிதி காட்டிய கொசுவர்த்தி சுருளை போல, தி.மு.க.,வை
எத்தனை முறை சுற்றி வந்தாலும், அடிமட்ட தொண்டனால் முதல்வர் பதவியை அடையவே முடியாது என்பதை குறிப்பதாய் இருந்திருக்கும்...கொசுவர்த்தி சுருளானது, தானாக சொந்த காலில் நிற்க வழியில்லாமல், இரும்பு ஸ்டாண்ட் நுனியிலேயே அமர்ந்திருக்கும். அதுபோல, உதயநிதியும், தன் தந்தையின் தோள் மீது நின்றே, குறுகிய காலத்தில்
இந்த வளர்ச்சியை அடைந்துள்ளார்.மேலும், 'சனாதனத்தை எதிர்ப்பதால், ஆட்சியே போனாலும் கவலையில்லை' என்று சொல்ல உதயநிதிக்கு என்ன உரிமை இருக்கிறது. அவரது வறட்டு பிடிவாதத்தால், ஐந்தாண்டு தி.மு.க., ஆட்சிக்கு ஓட்டளித்த மக்களுக்கு துரோகம்
இழைக்கவும் தயாராகி விட்டாரோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இந்தியாவின் உயர்ந்த ஜனாதிபதி பதவி கொடுத்து அழகு பார்த்தது பா.ஜ., கட்சி. ஆனால், தாழ்த்தப்பட்டவர்களுக்கு சமமாக உட்கார
நாற்காலி கூட கொடுக்காமல் அவமானப்படுத்தியது தான், தி.மு.க.,வினர் சாதனை என்பதை உதயநிதி மறந்து விட்டாரா?வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement