Load Image
Advertisement

கண்களுக்குப் பகையாகும் புகை

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் நன்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. மின்---சிகரெட்டுகளைப் பயன்படுத்துவதால் வரும் கேடுகள் இப்போது தான் ஆய்வு செய்யப்படுகின்றன.

கனடா நாட்டின் மெக்கில் பல்கலை ஆராய்ச்சியாளர்கள், சிகரெட் மற்றும் இ--சிகரெட்டுகளைப் பயன்படுத்தும் 13 முதல் 24 வயதுக்குட்பட்ட 4,351 இளம் பருவத்தினரைத் தேர்வு செய்தனர். பங்கேற்பாளர்கள் சிகரெட், மின்--சிகரெட்டுகள் அல்லது இரண்டின் பயன்பாட்டின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டனர்.

பங்கேற்பாளர்களின் கண்பார்வை மதிப்பிடப்பட்டது. அதில், கண் வலி, எரிச்சல், நீர் கொட்டுதல், அரிப்பு, சிவத்தல், வறட்சி, கூச்சம், மங்கலான பார்வை, சோர்வு, தலைவலி உள்ளிட்ட 10 அறிகுறிகள் தெரியவந்துள்ளன.

சிகரெட், மின்--சிகரெட்டுகள் இரண்டையும் பயன்படுத்துபவர்களுக்கு மிகவும் கடுமையான கண் நோய் அறிகுறிகள் இருந்தன. மற்ற பங்கேற்பாளர்களுடன் ஒப்பிடும்போது இவர்களுக்கு மிகவும் கடுமையான வறட்சி, கடுமையான வலி, மங்கலான பார்வை ஏற்பட்டிருந்தன.

சிகரெட் மற்றும் மின்--சிகரெட் பயன்படுத்துபவர்களில் கண் பிரச்னை ஆக்சிஜனேற்ற அழுத்தத்தால் ஏற்படுகிறது, இது கண்ணில் உள்ள ரத்த நாளங்களின் சுருக்கத்தை உருவாக்கும்.

இக்கண்டுபிடிப்புகளைச் சரிபார்க்க மேலும் நீண்டகால ஆய்வுகள் அவசியம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இந்தக் கண்டுபிடிப்புகள் புகைப்பவர்களிடையே கண் நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உதவும்.

அனைத்து புகையிலைப் பயனர்களையும் பரிசோதிக்கவும், ஆலோசனை வழங்கவும், சிகிச்சையளிக்கவும் வேண்டிய அவசியத்தை இந்த ஆய்வு உணர்த்தியுள்ளது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement