Load Image
Advertisement

அறிவியல் துளிகள்

1. பல், ஈறுகளில் நோய்களை ஏற்படுத்தும் 'பார்ஃபைரோமோனஸ் ஜின்ஜிவாலிஸ்' பாக்டீரியா, இதய நோய்களையும் உருவாக்குகிறது. ஆகவே, ஆரம்பத்திலேயே இது நம் வாயில் உள்ளதா என்று அறிவது அவசியம். இக்கிருமியைக் கண்டறிய அமெரிக்காவின் சின்சினாட்டி பல்கலை ஆய்வாளர்கள் கருவி ஒன்றை வடிவமைத்துள்ளனர். இக்கருவி இந்த பாக்டீரியாவின் செல் சுவரில் இருந்து வெளிப்படும் வேதிப் பொருளைக் கொண்டு கிருமி இருப்பதை உறுதி செய்யும்.
2. நண்டு, வண்டு, சிலந்தி ஆகிய உயிரினங்களின் உடலின் மீது ஓடாக அமைந்துள்ள வெளி எலும்புகள் சிடின் (Chitin) என்று அழைக்கப்படுகின்றன. இதிலிருந்து எடுக்கப்பட்ட சில வேதிப் பொருட்கள் பல நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகின்றன. அந்த வகையில் உடல் எடை அதிகரிப்பையும் இது கட்டுப்படுத்தும் என்று அமெரிக்காவின் வாஷிங்டன் மருத்துவ பல்கலை கண்டறிந்துள்ளது.

3.நிலவில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளத் தேவையான ஆற்றலை சூரிய ஒளி வாயிலாகப் பெறலாம். ஆனால், நிலவில் 14 நாட்கள் இரவு ஏற்படும்போது மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய அணுசக்தியே சிறந்த வழி. இங்கிலாந்தைச் சேர்ந்த பேங்கோர் பல்கலை அணு ஆற்றலை உள்ளடக்கிய, கசகசா விதை அளவே உள்ள சிறிய பந்துகளை உருவாக்கி உள்ளது. இவை கார்பன், யுரேனியம், ஆக்சிஜன் ஆகியவற்றால் ஆனவை. இவற்றைக் கொண்டு அணு ஆற்றலில் இயங்கும் கருவிகளைத் திறம்பட செயலாற்ற வைக்க முடியும்.
4. தீ விபத்து ஏற்படும்போது உதவும் வகையில் 'பயர்ட்ரோன்' எனும் ஒரு புதிய ட்ரோனை இங்கிலாந்தின் இம்பீரியல் பல்கலை வடிவமைத்துள்ளது. அலுமினியம், சிலிக்கா, கண்ணாடி பைபர்கள் ஆகியவற்றால் செய்யப்பட்டுள்ள இந்த ட்ரோன் 200 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தைத் தாங்கும் ஆற்றல் மிக்கது.
5.உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து சிறுநீரகம் அல்லது வேறு ஏதேனும் உறுப்பு புதிதாக உடலில் பொருத்தினால் அவற்றை உடல் ஏற்றுக் கொள்ளும் வரை கண்காணிக்க வேண்டும். இந்தக் கண்காணிப்பு வேலையைச் செய்யும் வகையில் சிகாகோவின் நார்த் வெஸ்டர்ன் பல்கலை ஆய்வாளர்கள் விரல் அளவுள்ள சிறிய கருவியை உருவாக்கி உள்ளனர். எலிகளை சோதித்து வெற்றியும் கண்டுள்ளனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement