தேசப்பற்று பொங்கி வழியும் இளைய தலைமுறையை இன்று ஒரு சேர பார்க்கும்
பொன்னான வாய்ப்பு
சென்னையில் உள்ள ஆபிசர்ஸ் டிரெய்னிங் அகாடமி (ஒடிஏ) ராணுவ அதிகாரிகளாக விரும்பும் இளயை தலைமுறைக்கு ஒராண்டு பயிற்சி கொடுத்து அதிகாரிகளாக்கி அழகு பார்க்கிறது.
இந்த வருடத்திற்கான அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கி அவர்களை வழியனுப்பிவவைக்கும் நிகழ்வு நடைபெற்றது.ராணுவ தலைமை தளபதி உள்ளீட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
அதிகம் போனால் 21 வயதிருக்கும் அந்த வயதில் மிடுக்கான ராணுவ உடையுடன் கம்பீரமாக இவர்கள் அணிவகுத்து வந்த காட்சி கண்கொளாக்காட்சியாகும்.
இவர்களை கவுரவிக்கும் விதமாக மூன்று ராணுவ ஹெலிகாப்டர்கள் இரண்டு முறை பறந்து சென்றன.
மொத்தம் 161 பேர் அதிகாரிகளுக்கான பயிற்சியை நிறைவு செய்தனர் இவர்களில் 36 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். பெரும்பாலானவர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் அவர்களுக்கு ராணுவத்தில் பணியாற்றுவதன் முக்கியத்தும் மற்றும் மகத்துவத்தை நன்கு புரிந்துவைத்துள்ளனர்.தமிழகத்தில் இருந்தும் நிறைய பேர் முன்வர வேண்டும்.
இவர்களின் பெற்றோர்கள்,உறவினர்கள்,நண்பர்கள் என்று நிறைய பேர் திரண்டு வந்து இந்த நிகழ்வினை விழாபோல கொண்டாடினர்.அதிகாரிகளுக்கான பேட்ஜ் வழங்கப்பட்டதும் அவர்கள் தத்தம் உறவுகளை ஒடி தேடிப்போய் ஆசீர்வாதம் வாங்கியதும் அவர்கள் கண்ணீர் மல்க ஆசீர்வாதித்ததும் பார்க்க நெகிழ்வாக இருந்தது. தாங்கள் அதிகாரிகளானதற்கு அடையாளமான தொப்பியை தங்கள் தாயின் தலையில் மாட்டி அழகு பார்த்து சிலர் மகிழ்ந்தனர்.
எங்கே எங்கள் எதிரி இப்போதே துவம்சமாக்குவோம் என்ற துடிப்பு கொண்டவர்கள் போல துப்பாக்கியை துாக்கிகாட்டியதும்,நாட்டிற்காக நாங்கள் உழைக்கத்தயார் என்று உரக்க சொல்வதுமாக ஒரு அரைமணிநேரம் அந்த இடம் உற்சாகத்தால் பொங்கி வழிந்தது.
-எல்.முருகராஜ்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!