Load Image
Advertisement

மலைப் பாம்பே மலைக்கும்!

விலங்குகளைப் பற்றிய தொலைக்காட்சி சேனல்களில், பன்றி முதலிய பெரிய விலங்குகளை மலைப்பாம்புகள் விழுங்குவதைப் பார்த்திருப்போம். ஆனால், தன்னுடைய உடல் விகிதத்தைப் பொருத்து மிகப்பெரிய பொருட்களை விழுங்குவதில் போட்டி வைத்தால், மலைப்பாம்புகளையே மூன்றடி நீளம் உள்ள ஒரு சிறு பாம்பு மலைக்க வைத்துவிடும் என்றால் நம்ப முடிகிறதா?

நம்பித் தான் ஆக வேண்டும் என்கிறது அமெரிக்காவைச் சேர்ந்த சின்சினாட்டி பல்கலை. சமீபத்தில் இங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த உண்மை தெரிய வந்துள்ளது.

இந்தச் சிறு பாம்பை, 'காரல் கேன்ஸ்' என்பவர் கண்டுபிடித்தார். இவற்றின் முக்கிய உணவு, பறவைகளின் முட்டையாக இருப்பதால், இவை 'கேன்ஸ் எக் ஈட்டர்' என்று அழைக்கப் படுகின்றன.

இந்தச் சிறிய ரக பாம்புகள் மிகவும் மெல்லியவை. இருந்தாலும் இவற்றால், இவற்றின் உடலை விட பெரிய முட்டைகளை விழுங்க முடிகிறது. இதற்கு முக்கிய காரணம், இவற்றின் மேல், கீழ் தாடை எலும்புகளுக்கு நடுவே இருக்கும் விரியும் தோல் அமைப்பாகும்.

இவற்றின் மிருதுவான வாயில் பற்கள் இல்லாததால், இவற்றால சுலபமாக இடைஞ்சல் இன்றி முட்டைகளை விழுங்க முடிகிறது. முட்டைகளை உண்ட பின், இவை ஓடுகளை வாய் வழியே வெளியேற்றி விடும். ஒரு சிறிய பாம்பின் இந்தப் பேராற்றல் விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement