Load Image
Advertisement

கிருமித் தொற்றுக்கு முடிவு

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்த பின்பு, உடலில் பொருத்தப்படும் செயற்கை உறுப்புகளின் மீது, கிருமித் தொற்றுகள் ஏற்படுகின்றன. இத்தகைய செயற்கை உறுப்புகள் மீது கிருமிநாசினிகள் மெல்லிய படலம் போல் பூசப்படுகின்றன என்றாலும் கூட, அவற்றையும் மீறி கிருமிகள், உறுப்புகள் மீது வளர்கின்றன. இதனால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

கிருமிநாசினிகளின் வீரியத்தை அதிகப்படுத்தினாலும், கிருமிகள் குறுகிய காலத்திலேயே எதிர்ப்பாற்றலை வளர்த்துக்கொண்டு விடுகின்றன.

இதற்கான தீர்வை ஆர்.எம்.ஐ.டி. பல்கலையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுள்ளனர். வேதியியல் முறையில் அன்றி, இயற்பியல் முறையில் இத்தீர்வு அமைந்துள்ளது.

அதாவது, தட்டான்கள் போன்ற சில வகை பூச்சிகளின் இறக்கைகளின் மேற்பரப்பில் கிருமித் தொற்று ஏற்படுவது இல்லை. இதற்குக் காரணம் இறக்கைகளில் காணப்படும் மிக நுண்மையான முள் போன்ற அமைப்புகள். இவற்றின் மீது நுண்ணுயிர்கள் அமரும் போது, அவை முட்கள் குத்தி இறந்துவிடுகின்றன.

விஞ்ஞானிகள் இதே முறையில் செயற்கை உறுப்புகள் மீது, டைட்டானிய உலோகத்தாலான நுண்ணிய முட்படலத்தைப் பொருத்தினர். ஆய்வுக்கூடத்தில் இவற்றை ஆய்வுக்கு உட்படுத்தியபோது பாக்டீரியா, பூஞ்சைகள் இவற்றின் மீது வளரத் தொடங்கிய உடனேயே இறந்துவிட்டன.

சில பூஞ்சைகள் உடனே அழியாவிட்டாலும் கூட, அவற்றின் செல், நுண்முட்களால் சேதப்படுத்தப்பட்டு விட்டன.

இதனால் அவற்றால் வேகமாக இனப்பெருக்கம் செய்து ஆபத்தான படலமாக உருவாக முடியவில்லை.

இந்தப் புதிய முறையைக் கொண்டு செயற்கை உறுப்புகளை வடிவமைத்தால் கிருமித் தொற்று ஏற்படுவதைத் தடுத்துவிடலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

படம் (இடது) : சமதளமான டைட்டானிய பரப்பில் உயிருடன் வாழும் பூஞ்சை.

படம் (வலது) : டைட்டானிய நுண் முட்கள் நிறைந்த பரப்பில் சிதைந்திருக்கும் பூஞ்சை.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement