Load Image
Advertisement

அறிவியல் துளிகள்

* சுவீடன் நாட்டின் கரோலின்ஸ்கா பல்கலையைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் புற்றுநோய்க் கட்டிகள் செழித்து வளர்வதற்கு வைட்டமின் சி, ஈ ஆகிய சத்துகள் முக்கியப் பங்காற்றுவது தெரிய வந்துள்ளது. ஆகவே, அளவுக்கு அதிகமான அல்லது தேவைப்படாத காலங்களில் இந்த வைட்டமின்களை எடுத்துக்கொள்வது ஆபத்தாகும் என்று அறிவித்துள்ளனர்.

* 36 ஆண்டுகளுக்கு முன்பு வெடித்துச் சிதறிய சண்டியுலீக் (Sanduleak - 69 202) எனும் பெரு நட்சத்திரத்தின் மிச்சங்களை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, படம் எடுத்துள்ளது. இது பூமியிலிருந்து 1,68,000 ஒளியாண்டு தொலைவில் உள்ளது. நமது சூரியனை விட 20 மடங்கு அதிக நிறையைக் கொண்டிருந்தது.

* நமது சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கிரகங்களைக் கண்டுபிடிப்பதற்காக அனுப்பப்பட்ட நாசாவின் 'டெஸ்' (TESS - - Transiting Exoplanet Survey Satellite) செயற்கைக்கோள், TOI-4600c எனும் புதிய கோளைக் கண்டுபிடித்துள்ளது. சனிக் கோளின் அளவுள்ள இது, பூமியிலிருந்து 815 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. இதன் சராசரி வெப்பநிலை மைனஸ் 78 டிகிரி செல்சியஸ்.

* கனடா நாட்டின் மெக்கில் பல்கலையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மாறிவரும் பருவச் சூழலைச் சமாளிக்கும் தன்மையும், அதிக சத்தும் மிக்க உருளைக் கிழங்குகளை உருவாக்க மரபணு சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

* 2018ம் ஆண்டு கலிபோர்னியாவின் மத்திய கடற்கரை ஒட்டிய பகுதியில் ஆழ்கடலில் திடீரென 20,000 ஆக்டோபஸ்கள் ஒன்று கூடின. இதற்கான காரணம் சமீபத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் குறிப்பிட்ட பகுதியில் கடலில் எரிமலை இருந்ததால், வெப்பநிலை அதிகமாக இருந்துள்ளது. தங்கள் முட்டைகள் வேகமாகப் பொரிய வேண்டும் என்பதற்காக இவை ஒன்றுகூடின என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement