Load Image
Advertisement

பனிக்கரடிகளைப் பாதுகாக்க புதுவழி!

துருவங்களில் உள்ள பனிக்கட்டிகள் மிக வேகமாக உருகுகின்றன. அதனால், அங்கே வாழும் பனிக்கரடிகள் அழிந்துகொண்டே வருகின்றன. அவற்றை அழிவிலிருந்து காப்பது பெரும் சவாலாக உள்ளது.

பொதுவாக அழிவின் விளிம்பில் இருக்கும் விலங்குகளைக் காப்பதற்கு, விஞ்ஞானிகள் அவற்றைத் தொடர்ந்து கண்காணிப்பார்கள். இதன் வாயிலாக அவற்றுக்கு என்னென்ன ஆபத்துகள் வருகின்றன, அவற்றின் எண்ணிக்கை எவ்வாறு குறைகிறது என்பனவற்றை அறிந்துகொள்ள முடியும்.

ஆனால், பனிக்கரடிகளோ, மிகக் கடுமையான சூழலில் வாழ்வதால், அவற்றை நெருங்கிச் சென்று கண்காணிப்பதோ, ஏதேனும் கருவிகளை அதன் உடலில் பொருத்திக் கண்காணிப்பதோ இயலாத காரியம்.

சமீபத்தில் ரஷ்யாவின் மாஸ்கோவைச் சேர்ந்த இடாஹோ பல்கலை இதற்கு ஒரு புதிய தீர்வை வழங்கியுள்ளது. பனிக்கரடிகள் பொதுவாக நடக்கும் போது, அவற்றின் பாதத் தோலில் உள்ள சில மரபணு பொருட்களை பனிப் பாறைகளில் விட்டுச் செல்கின்றன.

ஒவ்வொரு பனிக்கரடிக்கும் வெவ்வேறு மரபணுக்கூறுகள் இருக்கும் என்பதால் அவற்றை எடுத்து ஆராய்வதன் வாயிலாக எந்தப் பனிக்கரடி எந்தப் பக்கம் சென்றுள்ளது என்று அறிய முடியும். பனிக்கரடியின் பாலினத்தையும் கூட இதிலிருந்து அறிந்து கொள்ள முடியும்.

இதன் வாயிலாக ஒரு குறிப்பிட்ட பனிக்கரடியைக் கூட தொடர்ந்து கண்காணிக்க முடியும். இந்த முறை மற்ற முறைகளை விட சுலபமானதாகவும், பொருளாதார ரீதியாக பயன் தருவதாகவும் உள்ளது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement