Load Image
Advertisement

கட்டடத்தை வலிமையாக்கும் காபி!

உலகம் முழுவதும், ஒவ்வோர் ஆண்டும், 5.4 கோடி டன் காபித் துாள் கழிவு உற்பத்தியாகிறது. இதை மறுசுழற்சி செய்யாமல் அப்படியே பூமியில் புதைத்து விடுகிறோம்.

கட்டடங்கள் கட்டுவதற்குத் தேவையான கான்கிரீட் கலவையில் ஆற்றுமணலுக்குப் பதிலாகக் குறிப்பிட்ட சதவீதம் இவற்றைப் பயன்படுத்த முடியும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

ஒவ்வோராண்டும், 5,000கோடி டன் மணல், கட்டடங்கள் கட்டுவதற்காகப் பயன்படுகிறது. ஆற்றுப்படுகைகளில் இருந்து மணலை எடுப்பதால் இயற்கைச் சூழல் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவின் ஆர்எம்ஐடி பல்கலை ஆய்வாளர்கள் காபிக் கடைகளில் இருந்து பயன்படுத்தப்பட்ட காபித் துாளை வாங்கினர். அவற்றை வெவ்வேறு வெப்ப நிலையில், ஆக்சிஜன் இல்லாத சூழலில், 'பைரோலைசிஸ்' முறையில் சூடுபடுத்தினர்.

வெவ்வேறு வெப்ப நிலையில் சூடாக்கிய காபித் துாளை, கட்டுமானத்துக்குப் பயன்படும் போர்ட்லாண்டு சிமென்டுடன், ஆற்றுமணலுக்குப் பதிலாக வெவ்வேறு விகிதங்களில் கலந்து, கான்கிரீட் கலவைகள் தயாரித்து, கட்டிகள் செய்தனர். விஞ்ஞான முறையில் இவற்றின் அழுத்த வலிமையைச் சோதித்துப் பார்த்தனர்.

இக்கட்டிகளுள் ஆற்றுமணலுக்குப் பதிலாக, 15 சதவீத காபித் துாள் பயன்படுத்தப்பட்டு, 350 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சூடாக்கப்பட்ட கான்கிரீட், மற்ற விகிதங்களில் காபித் துாள் கலக்கப்பட்ட, மற்ற வெப்பநிலைகளில் சூடாக்கப்பட்ட கான்கிரீட் கட்டிகளை விட, வலிமை மிகுந்ததாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே வீணாக்கப்படும் காபித் துாளைச் சரியாகப் பயன்படுத்தினால், கட்டடங்களுக்கு வலிமை கொடுப்பதோடு, சுற்றுச்சூழலுக்கும் நன்மை தரும்.



வாசகர் கருத்து (1)

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    காபி தூளை போன்ற நிட்ரோஜென் நிறைந்த உரம் கிடைப்பதில்லை வேஸ்ட் பண்ணாதீங்க

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement