Load Image
Advertisement

சத்தாகும் கழிவு!

ஆலிவ் எண்ணெய், சமையலிலும், அழகு சாதனப் பொருட்களிலும், இன்னும் பிறவற்றிலும் பயன்படுகிறது. ஆனால், எண்ணெய் எடுத்த பின் வீணாகிற ஆலிவ் சக்கை பெரும்பாலும் பயன்படாமல் அப்படியே குப்பைக்குப் போகிறது.

அதிலிருந்து மருத்துவ குணம் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்கள் உருவாக்கும் வழியை சுவிட்சர்லாந்தின் இடிஹெச் சுரிச் பல்கலை மாணவர்கள் கண்டுபிடித்து இருக்கின்றனர்.

இந்த முறைப்படி கழிவு நீரையும், ஆலிவ் சக்கையையும் பிரிப்பதற்காக, மையவிலக்கு சுழற்சிக் கருவி உடைய இயந்திரத்திற்குள் செலுத்துகின்றனர். இதில் கழிவு நீரும், ஆலிவ் சக்கையும் வேகமாகச் சுற்றப்படும். இதனால், இவை இரண்டும் தனித்தனியாகப் பிரிக்கப்படும். இதிலிருந்து பிரியும் தண்ணீரை மட்டும் ஓர் உறிஞ்சு வடிகட்டி வழியாக அனுப்புவர். இது ஆன்ட்டி ஆக்சிடென்ட் அடங்கிய திரவத்தை மட்டும் தனியாகப் பிரித்து எடுக்கும். இந்த உறிஞ்சு வடிகட்டி முழுக்கவே இயற்கைக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாத பொருட்களால் உருவாக்கப்பட்டது.

இவ்வாறு கிடைக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் திரவம் அடர் பழுப்பு நிறத்தில், கசப்பான சுவையுடன் இருக்கும். இதை மீண்டும் சுத்திகரித்து, தோலுக்கான அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் பயன் படுத்த முடியும்.

ஒரு பாட்டில் ஆலிவ் எண்ணெய் தயாரிக்கும் போது, நான்கு பாட்டில் எண்ணெய்க் கழிவு உற்பத்தியாகிறது. ஆகவே, இதை முறையாக பயன்படுத்தினால் சுற்றுச்சூழல் மாசுபாடு குறைவதோடு பல பயனுள்ள பொருட்களும் கிடைக்கும்.



வாசகர் கருத்து (1)

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    தமிழில் அதற்க்கு வேறு பெயர் உண்டு அதன் பெயர்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement