Load Image
Advertisement

மூளை நோய்களை ஏற்படுத்தும் காட்டுத் தீ!

காட்டுத் தீ என்பது இயற்கையாக ஏற்படும் ஒரு காற்று மாசு. மாறிவரும் பருவ சூழ்நிலைகளால் அடிக்கடி ஏற்படும் காட்டுத் தீ, காற்றில் மிக அதிகமான துகள்மப் பொருட்களை வெளியிடுகிறது. இவற்றில் சல்பேட்கள், கார்பன், நைட்ரேட்கள், பிற கனிமத் துாசுகள் இருக்கும்.

2.5 மைக்ரோ மீட்டர்கள் அல்லது அதற்கும் குறைவான விட்டத்தை உடைய நுண் துகள்மப் பொருட்கள் (PM2.5) மிக ஆபத்தானவை. இவை நம்முடைய ஒரு முடியின் விட்டத்தை விட 30 மடங்கு சிறியவை. அதனால், இவற்றை சுவாசிக்கும் போது மிகச் சுலபமாக நுரையீரல் திசுக்களிலும், மூளையிலும் சென்று படிந்துவிடும்.

இதுகுறித்து அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலை, 27,857 பேரைக் கொண்டு ஆய்வு செய்தது. இதில் நுண் துகள்மப் பொருட்களால் காற்று மாசு அதிகம் இருந்த பகுதிகளில் வாழ்ந்தவர்கள் பலருக்கு மூளை தொடர்பான 'டீமென்ஷியா' நோய் ஏற்பட்டுள்ளதுகண்டுபிடிக்கப்பட்டது.

'டிமென்ஷியா' என்பது நம்முடைய அன்றாட செயல்பாடுகளை பாதிக்கக்கூடிய பல்வேறு விதமான மூளை தொடர்பான நோய்களின் பொதுப் பெயர். மிகவும் பொதுவான 'டிமென்ஷியா' நோய் என்றால், 'அல்சைமரைச்' சொல்லலாம்.

காட்டுத் தீயால் ஏற்படும் புகை பொதுவாக கண்களையும், தொண்டையையும் பாதிக்கும் என்பது தெரிந்த விஷயம் தான். என்றாலும், இது மூளை நோய்களை ஏற்படுத்தும் என்பது புதுச் செய்தியாகும்.

சுற்றுச்சூழல் மாசுபாட்டால் உருவாகும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்துவது மனிதர்களின் கையில் தான் உள்ளது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement