Load Image
Advertisement

அறிவியல் துணுக்குகள்

01. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நட்சத்திரங்களிலேயே பூமியிலிருந்து மிகத் தொலைவில் இருக்கும் இயரெண்டல் நட்சத்திரத்தை, நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி புகைப்படம் எடுத்துள்ளது. இந்த நட்சத்திரம் மார்ச் 2022ம் ஆண்டே ஹபிள் தொலைநோக்கியால் கண்டு பிடிக்கப்பட்டது என்றாலும், தெளிவான புகைப்படத்தை ஜேம்ஸ் தொலைநோக்கி தான் எடுத்துள்ளது. இந்த நட்சத்திரம் பூமியில் இருந்து 1290 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கிறது.

02. கலிபோர்னியாவின் ஸ்டான்போர்ட் பல்கலையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் வெயில் காலத்தில் அதிக வெப்பத்தை உள்ளே விடாத, குளிர்காலத்தில் உள்ளிருக்கும் வெப்பத்தை வெளியிடாத, சுவருக்கு அடிக்கும் புதிய வகை பெயின்ட்டைக் கண்டுபிடித்துள்ளனர். இது இரண்டு அடுக்குகளால் ஆனது. உட்புற அடுக்கு பல நிறங்களை உடைய கனிமமற்ற நானோ துகள்களாலும், மேலடுக்கு அலுமினிய துண்டுகளாலும் ஆனது.

03. நாய்களுக்கு நம்மை விட 10,000 மடங்கு அதிகமான மோப்ப சக்தி உண்டு. நாம் நோயுற்றிருக்கும்போது நம் உடலிலிருந்து சில வகையான ஆவியாகக் கூடிய கனிமச் சேர்மங்கள் வெளிப்படுகின்றன. இவை ஏற்படுத்தும் மணத்தைக் கொண்டு பழக்கப்படுத்தப்பட்ட நாய்களால் புற்றுநோய், நீரிழிவு, மைக்ரான், மலேரியா, கோவிட் உள்ளிட்ட 8 நோய்களைக் கண்டுபிடிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

04. அமெரிக்காவின் நார்த் வெஸ்டர்ன் பல்கலை மேற்கொண்ட ஆய்வில், நகரங்களில் பல்வேறு காரணங்களினால் நிலத்திற்கு அடியில் வெப்பநிலை கூடிக் கொண்டே வருவதும், இதனால் நிலம் மேல் நோக்கி விரிவடைவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, நிலத்தின் மீது இருக்கும் கட்டடங்களுக்குக் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

05. நிலவின் ஈர்ப்பு விசையால் பூமியில் கடல் அலைகள் தோன்றுகின்றன. அதுபோல, மேச்சோ எனும் ஒரு நட்சத்திரத்தில், அதன் அருகே இருக்கும் சிறிய நட்சத்திரத்தின் ஈர்ப்பு விசையால், நமது சூரியனைப் போல மூன்று மடங்கு உயரம் மிக்க அலைகள் தோன்றுவதை ஹார்வர்ட் பல்கலை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இந்த நட்சத்திரம் நம்முடைய சூரியனை விட 35 மடங்கு அதிக நிறையை உடையது.



வாசகர் கருத்து (2)

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    நன்றி இதுபோன்று மேலும் பல கன்டென்ட் வெளியிட வேண்டும்

  • sankar - Nellai,இந்தியா

    நாய்களுக்கு மோப்பசக்தி உண்டு - ஆனா அது என்னத்த மோப்பம் புடிச்சது என்று யாரு மோப்பம் புடிக்கிறது

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement