Load Image
Advertisement

மறுசுழற்சியாகும் பாலியெஸ்டர் துணிகள்!

பாலியெஸ்டர் துணிகள் நீண்ட காலம் நீடிப்பவை, இலகுவானவை, விரைவாக உலர்பவை, சுத்தம் செய்ய எளிதானவை. அறிமுகம் செய்யப்பட்ட காலத்தில் இருந்தே நல்ல வரவேற்பைப் பெற்றவை.

ஆனால், இவற்றை உற்பத்தியில் செய்யும்போது அதிகளவு புதைபடிவ எரிபொருட்கள் செலவாகின்றன. அதோடு நிறைய கரியமில வாயுவையும் உருவாக்குகின்றன.

தேவை முடித்தவுடன், மறுசுழற்சி செய்யப்படாமல் குப்பைக் கிடங்கில் போடப்படுகின்றன. இதனால் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.

தற்போது, டென்மார்க் நாட்டைச் சேர்ந்த கோபன்ஹேகன் பல்கலை ஆய்வாளர்கள் பாலியெஸ்டர் துணிகளை மறுசுழற்சி செய்வதற்கான எளிய வழிமுறையை உருவாக்கி உள்ளனர்.

பாலியெஸ்டர் உடைகளைச் சிறிய துண்டுகளாக வெட்டி, அதோடு கரைப்பான், அமோனியம் கார்பனேட் உப்பு ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும். பின்னர் இவற்றை 160 டிகிரி செல்சியஸ் வரை சூடாக்கி, 24 மணி நேரம் அப்படியே விட்டு விட வேண்டும்.

இப்படிச் செய்தால், பிளாஸ்டிக்கும் பருத்தி இழைகளும் வெவ்வேறு அடுக்குகளாகப் பிரிந்து தங்கிவிடும். பிரிக்கப்பட்ட இழைகளை மறுசுழற்சி செய்வது சுலபம்.

இது ஓர் எளிய, செலவு குறைந்த செயல்முறை. இதை வணிக ரீதியாக பெரியளவில் செய்வதற்கு முன்னெடுப்புகள் இனி துவங்கும்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement