Load Image
Advertisement

வித்தியாசமான ஆபத்து!

நுண்நெகிழிகள் எல்லா இடங்களிலும் உள்ளன. 5 மில்லிமீட்டருக்கும் குறைவான அளவை உடைய இவை, சுற்றுச்சூழலில் இருந்து நம் உடலுக்குள் நுழைகின்றன. சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு புதிய ஆய்வில், நம் ஆரோக்கியத்தில் நுண்நெகிழிகள் ஏற்படுத்தும் தாக்கம் தெரியவந்துள்ளது.

தென் கொரியா நாட்டின் டேகு கியோங்புக் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்டு டெக்னாலஜியைச் சேர்ந்த ஆய்வாளர்கள், எலிகளின் மூளையில், அவற்றால் உட்கொள்ளப்பட்ட நுண்நெகிழிகளின் பாதிப்பை ஆராய்ந்தனர்.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் நெகிழிப் பொருட்கள் உடைந்து, கிழிந்து, சிறிய அளவிலான நுண்நெகிழிகள் ஆகின்றன. இந்த நுண்நெகிழிகள் சூரிய ஒளி, காற்று, வெப்பம், மழை ஆகியவற்றால் இயற்பியல், வேதியியல் மாற்றம் அடைந்து இரண்டாம் நிலை 'மைக்ரோபிளாஸ்டிக்ஸ்' எனப்படும் சிறிய துகள்களாக சிதைகின்றன.

ஆய்வாளர்கள், 100 மைக்ரோமீட்டர் மற்றும் அதற்கும் குறைவான அளவு கொண்ட இரண்டாம் நிலை 'மைக்ரோபிளாஸ்டிக்ஸ்'களை ஏழு நாட்களுக்கு, ஒரு நாளைக்கு ஒரு முறை வீதம், ஒரு பகுதி எலிகளுக்கு வாய்வழியாகச் செலுத்தினர். மற்றொரு பகுதி எலிகளுக்கு, சாதாரண 'மைக்ரோபிளாஸ்டிக்ஸ்' வழங்கினர்.

இரு எலி குழுக்களை ஒப்பிட்டபோது, இரண்டாம் நிலை 'மைக்ரோபிளாஸ்டிக்ஸ்'கள் தரப்பட்ட எலிகளுக்கு, சாதாரண 'மைக்ரோபிளாஸ்டிக்ஸ்'கள் தரப்பட்ட எலிகளை விட அதிகமாக, மூளைத் திசுக்களில் அழற்சி ஏற்பட்டதைக் கண்டறிந்தனர்.

இதிலிருந்து இரண்டாம் நிலை நுண்நெகிழிகள், சாதாரண நுண்நெகிழிகளைக் காட்டிலும் ஆபத்தானவை என்பது தெரிய வந்துள்ளது. இவை மனித உடலில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது பற்றிய ஆய்வுகள் தொடர்கின்றன.



வாசகர் கருத்து (2)

  • naadodi - Dallas,யூ.எஸ்.ஏ

    நெகிழி என்று எழுதினால் எல்ல்லோருக்கும் புரியுமா? கொஞ்சம் தனித்தமிழ் விடுத்து ஆங்கிலத்திலும் அதன் பெயர் பிளாஸ்டிக் என்று எழுதினால் நெகிழி என்ற சொல் பரவாகும். புரிதலும் அதிகரிக்கும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement